அனைவரும் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும், செனட் தலைவர் கூறுகிறார்

 

Federal constitution1மக்களிடையே சச்சரவுகள் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பெடரல் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெடரல் அரசமைப்புச் சட்டம் அமைதியும் மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை நோக்கமாக கொண்ட ஒரு புனிதமான கருவி. ஆகவே, அரசியல் கட்சித் தலைவர்கள் அரசமைப்புச் சட்டத்தை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தேவான் நெகாரா தலைவர் அபு ஸாகார் உஜாங் கூறினார்.

“ஆனால், இப்போது அதிகமான மக்கள் துணிச்சலடைந்து அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள சமயம், மொழி, இனம் மற்றும் அரச ஆட்சியாளர்கள் அமைவு ஆகியவை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்”, என்று அவர் நேற்று தும்பாட்டில் நடைபெற்ற சிந்தா நெகாரா நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.Federal constitution2

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை சம்பந்தமாக எழும் எந்த வகையான நடவடிக்கைக்கும் எதிராக அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அபு ஸாகார் கூறினார்.

இந்த சிந்தா நெகாரா நிகழ்ச்சியை மலேசிய செனட்டர்கள் மன்றமும் முன்னாள் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மன்றமும் (முபாராக்) ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட தும்பாட் தோமோய் போக்ஸிங் (குத்துச் சண்டை) மன்றத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெங்காலான் குபோர் பகுதியிலிருந்த வந்திருந்த இளஞர்கள் ஆவர்.

பெங்காலான் குபோர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் செப்டெம்பர் 25 இல் நடைபெறவிருக்கிறது.