பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் சமயங்களுக்கிடையிலான பராமரிப்பு வழக்கில் போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாக்கார் ஈப்போ உயர்நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்படும் சாத்தியத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியை சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) உருவாக்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ஏழு நாள்களுக்குள் கே. பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்பதுல்லாவை கைது செய்யுமாறு ஐஜிபியை கட்டாயப்படுத்தும் மெண்டாமஸ் என்ற ஆணைக்கு ஒருதலையான தடையுத்தரவை சட்டத்துறை தலைவர் (ஏஜி) மேல்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து பெற்றதன் வழி ஐஜிபி நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.
ஒருதலையான தடையுத்தரவு என்பது ஒரு கட்சிக்காரர் சார்பாக பெற்ற உத்தரவாகும். இதனைத் தொடர்ந்து, இப்போது இரு கட்சிக்காரர்களும் நீதிமன்றத்திற்கு செப்டெம்பர் 25 இல் வர வேண்டும். அப்போது இந்த தடையுத்தரவு நிரந்தரமானதா என்பது முடிவு செய்யப்படும்.
கடந்த புதன்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த இந்த தடையுத்தரவு முடிவு இன்று இந்திராவின் வழக்குரைஞரும் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரனிடம் சேர்க்கப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை நீதிபதி அஸியா அலி என்பவர் மட்டுமே எடுத்தார். வழக்கமாக மூன்று நீதிபதிகளின் அமர்வு முடிவெடுக்கும். இதற்கு முன்பு முகமட் நிஷார் ஜமாலுடினுக்கும் ஸாம்ரி அப்துல் காடிருக்கும் இடையிலான வழக்கிலும் அவ்வழக்கை செவிமடுத்த ஒரே ஒரு மேல்முறையீட்டு நீதிபதி தடையுத்தரவை வழங்கியுள்ளார்.
ஏஜி செய்திருந்த மனு தேவையற்றது என்பதோடு நியாயமற்றதுமாகும் என்று குலசேகரன் கூறினார். ஒரு கட்சிக்காரர் சார்பாக மனு செய்வதைவிட தமக்கும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பியிருந்தால் மூன்று மேல்முறையீட்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விவாதத்தை நடத்தியிருக்கலாம் என்றாரவர்.
குலா, அரசாங்கத்தின் உள்நோக்கம்தான் என்ன?
தங்களுடைய வாதத்தையும் கேட்பதைத் தவிர்த்து அரசாங்கம் எடுத்த ஒருதலையான உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கையை குலா சாடினார். அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் உள்நோக்கம்தான் என்ன என்று அவர் வினவினார்.
இந்த ஒருதலையான தடையுத்தரவு பற்றி அறிந்த இந்திரா மிகவும் கலக்கமடைந்துள்ளார் என்று கூறிய குலா, இதை நாங்கள் எதிர்ப்போம் என்றார்.
பத்மநாதனை கைது செய்ய ஐஜிபி மறுப்பது அவர் தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிப்பதற்கு உதவுவதாகும் என்றார் குலா.
“நீதி நிருவாகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஒருதலையான தடையுத்தரவை தள்ளிவைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வோம் என்று இந்திராவுக்கு நானும் எனது வழக்குரைஞர்கள் குழாமும் உறுதியளித்துள்ளோம்”, என்று குலா தமது கடப்பாடை வெளிப்படுத்தினார்.
உலகில் எல்லபோரும் நடக்குது ! மலேசிய நீதி துறையில் அக்கப்போர் நடக்கிறது?
நேற்று கருத்து தெரிவித்ததைபோல், இனி நீதிமன்றங்களை சர்க்கஸ் கூடாரமாகவும், நீதிபதிகளை சர்க்கஸ் கோமாளிகளாகவும் ஆக்கி விட்டது மட்டுமல்ல, தற்பொழுது இந்நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கமும் கோமாளிகள்தான் என்று நிரூபணம் ஆகிவிட்டது.
நீதிமன்றங்களையோ அல்லது போலீஸையோ நம்பி எந்தவித பலனுமில்லை.இனி சட்டம் மக்கள் கையில்.
குற்றவாளிகளை மக்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், கோமாளி அரசாங்கமோ அல்லது கோமாளி போலிஸோ அல்லது கோமாளி நீதிபதிகள் ஆகட்டும் மக்கள் பயப்பட தேவையில்லை.
இனி மக்களின் நம்பிக்கை நட்சதிரங்கள் “குண்டர் கும்பல்களும் -நிழல் உலக தாதாக்களும்தான்”
இந்த IGP-யின் செய்கையை பார்த்து, இவனை போன்ற கோழைகளை “A????G BN” கூறியதற்கு பதிலாக “B?B? A????G BN” கூறியிருக்க வேண்டும் நீதிபதிகள், மன்னிக்கவும் சர்கஸ் கோமாளிகள் அனைவரும் கருத்து தெரிவித்து இருக்கிறார்களாம்.
அதாவது அனைத்து காகாகளும் ஒன்று சேர்ந்து மற்றொரு காக்காவை நீ கருப்பு என்று சொன்ன மாதிரி.
IGP யை ஒன்றும் செய்ய முடியாது அவருக்கு தெரியாத லுபாங் இருக்க முடியும்மா ? AG க்கு பல லுபாங் தெரியும் !
உலகத்திலேயே நீதிக்கு மதிப்பு இல்லாத நாடு என்றால் அது மலேசியாவில் தான்.இந்த நாட்டில் நீதிமன்றத்துக்கும் சரி நீதிபதிக்கும் சரி அரசாங்க ஊழியர்கள் மதிப்பு கொடுப்பது இல்லே …..நாடு கூடிய விரைவில் ஈராக் & ஆப்கானிஸ்தான் போல ஆகிவிடும்….முதலில் பிள்ளையின் வளர்ப்பு தாயிக்கு தான் உரிமை உள்ளது….இது உலக நாட்டில் கடைபிடிக்கும் ஒன்று….ஆனால் மலேசியாவில் தலை கீழாக உள்ளது…இது அவரவர்கள் இஸ்டத்துக்கு அமைத்து கொள்கிறார்கள்…..என்ன கொடுமை சார் இது…..சிவில் முறைப்படி பிறந்த குழந்தை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற வேண்டும்….பாவம் ஒரு பிள்ளையை பெற்ற தாயின் வேதனை எந்த அளவுக்கு போகிறது….கல் நெஞ்சம் படைத்த அந்த இந்து துரோகி மதத்துக்கும் சமுதாயத்துக்கும் பெரும் துரோகம் செய்து விட்டான்.இவன் எல்லாம் ஒரு மனிதன்…..இது தான் அவன் சென்ற மதத்தில் கூறியுள்ளதா….பிள்ளையை பெற்ற தாயிடம் இருந்து பிரிக்கணும் என்று????
நீதிமன்ற தீர்ப்பு எந்த ஒரு தரப்பினரையும் சார்ந்திடாமல் நடுநிலையாக இருந்திடவேண்டும் . சமிபகாலமாக நாட்டில் நீதி தடுமாறிவருவதை காண்கமுடிகிறது. கடவுளை நம்புவோர் கைவிடப்படார் என்பதை போன்று, அநீதிக்கு கூடியவிரையில் தண்டனை பெறப்படும் என்பதனை நாம் காண்போம் . நன்றி .
மலேசிய நீதிமன்றமும் ‘ரிமுட் கொன்றோல்’போல் ஆகிவிட்டது.நீதி தேவதையின் கண்கள் கிழிக்கப் பட்டுள்ளன.எங்கே நீதி? எங்கே நியாயம்?ஒரு தாயின் பாச உணர்வுக்கு சட்டத்தில் இடமில்லையா?இந்த வழக்கை கொஞ்சம் திருப்பி போட்டுப் பாருங்கள்.அந்த தாய் ஒரு முஸ்லீம்.அவன் ஒரு ஹிந்து என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்.இந்நேரம் அந்த ஹிந்து கம்பி எண்ணிக் கொண்டிருப்பான்.இதற்கு என்ன சொல்வது?இனவாதமா?அல்லது ‘சத்து மலேசியாவா?
இதுதான் இவன்களின் நீதியும் நியாயமும். இவன்களின் விருப்பத்திற்கு உட்பட்டே எல்லாம் நடக்கும் –எல்லாம் இவன்கள் கையில் இருக்கும் போது ஒன்றும் நடக்காது.
இதை நாம் வேறு ஒரு கோணத்திலும் பார்க்க வேண்டும். ஏற்கனவே சிவில் நீதிமன்றமா அல்லது ஷாரியா நீதிமன்றமா என்று பட்டிமன்றம் நடத்தியவர் நம் ஐ.ஜி.பி.. ஒரு வேளை ஷாரியா நீதிமன்றம் இதனை அனுமதிக்கலாம். சும்மா தவறு என்று சொல்லி தேசி நிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளாகாதீர்கள்!
போங்கடா போக்கத பசங்களா