தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் திடீரென்று அதிகரித்து வரும் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மலேசிய வழக்குரைஞர் மன்றம் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இன்று விஸ்மா எம்சிஎயில் நடந்த அந்த அமைப்பின் சிறப்பு பொதுக்கூட்டத்தில் வழக்குரைஞர் நியு சின் இயு முன்மொழிந்தது 120 இதர வழக்குரைஞர்கள் வழிமொழிந்த அத்தீர்மானம் விவாதிக்கப்பட்டது.
அந்த தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள் மற்றும் ஒரு சட்டப் பேராசிரியர் உட்பட பலர் திடீர் திடீர் என்று கைது செய்யப்பட்டு தேச நிந்தனைக் கருத்துகளை கூறினர் என்று குற்றம் சாட்டப்பட்டது இந்த தீர்மானத்திற்கு இட்டுச் சென்றது.
எட்மண்ட் போன் அளித்த தகவலின்படி தீர்மானத்திற்கு ஆதரவாக 701 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டது.
இதற்கு முன்பு மலேசிய வழக்குரைஞர் மன்றம் போலீசாரின் தவறான செயல்கள் மற்றும் அமைதியாக ஒருங்கு கூடுதல் மசோதா 2011 ஆகியவற்றுக்கு எதிராக பேரணிகளை நடத்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட “நீதிக்கான நடை” பேரணியில் 2,000 வழக்குரைஞர்கள் புத்ரஜெயாவிலுள்ள பிரதமர்துறை இலாகாவை நோக்கி 3.5 கிலோமீட்டர் நடந்து சென்று நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை நிறுத்துவதற்கு ஓர் அரசு ஆணையம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.
எந்த பேரணியும் அம்நோகாரன்களுக்கு ஒன்றும் செய்யாது. இன்னும் 4 ஆண்டுகள் வெறுமனே உட்கார்ந்து தின்னலாமே? அதுவரை என்ன என்ன காலித்தனம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்வான் கள்- பிறகு எல்லா வாக்குறுதிகளையும் அள்ளி வீசி ஆட்சியை பிடுத்து திரும்பவும் எல்லா தில்லுமுல்லு திருகுதாளம் செய்வான்கள்
இப்படியெல்லாம் வறட்டு வேதாந்தம் பேச கூடாது .பொறுப்புள்ள குடிமகன் சட்டத்திற்கு உட்பட்டு தன் எதிர்ப்பை தெரிவிக்க தயங்ககூடாது. இதனால் பயன் உண்டா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யட்டும்
சட்ட வல்லுனர்கள் ஒன்று கூடினால் நாட்டில் பெரிய கோளாறு நடப்பதாக பொருள் ! மகாதிர் காலத்தில் சட்டத்தை துவைத்து காயப்போட்டு விட்டார் ! கர்பால் என்ற சிங்கம் இல்லாமல் போனது ரொம்ப பேருக்கு குளிர்விட்டு போனது !