த ஹெராஸ்ட் அதன் வெளியீட்டில் “அல்லா” என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற பெடரல் உச்சநீதிமன்றத்திற்கு முறையீடு செய்ய அனுமதி கோரி அது செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த பெடரல் உச்சநீதிமன்றத்தின் சர்ச்சைக்குள்ளான தீர்ப்பை அதே நீதிமன்றம் மறுஆய்வு செய்ய த ஹெரால்ட் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை பெர்னாண்டஸ் மற்றும் செல்வராஜா நிறுவனம் இன்று பிற்பகல் மணி 3.30 அளவில் பதிவு செய்தது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்களில் ஒருவரான பெஞ்சமின் டாசன் அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் மூன்று முக்கியமான காரணங்கள் எழுப்பப்படுள்ளன என்றார்.
வெற்றி பெற இறை வேண்டல்கள்! வாழ்த்துகள்! ஏதோ சிலரின் அடாவடித்தனத்துக்காக உரிமைகளை விட வேண்டிய அவசியமில்லை.
மக்களுக்கு எதிராக செயல்பட்ட எத்தனையோ அரசுகள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. நம்மிடையே எத்தனையோ பன்மொழி வல்லுனர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் மற்ற மொழியை பேசவோ,படிக்கவோ,எழுதவோ கூடாது என்று அந்தந்த மொழியினர் தடுத்திருந்தால் எப்படி மற்ற மொழியில் உரையாடுவது? ஒவ்வொரு மொழியின் இலக்கண கூறுகளை தெளிவாக தெரிதால்தானே அம்மொழி இலக்கியங்களில் உள்ள கருத்துக்களை புரிந்து அம்மொழி அறியாதவர்களுக்கும் கூற முடியும். இன்று உலகம் எல்லையில்லா நாடுகளாகிவிட்டது (BORDER LESS ) மற்றவர் நம் மொழியை இலக்கண தெளிவோடு பேசுவதையும், எழுதுவதையும் கேட்கும்போதும் பார்க்கும்போதும் நமக்குள் அவர்பால் ஒரு இனம்தெரியாத ஈர்ப்பு ஏற்ப்படும். இன்றைய காலத்தில் எந்த மொழியையும் எவரும் தனி உரிமை கொள்ள முடியாது. அப்பேற்பட்ட மொழிகள் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருப்பினும் மறைந்தே போகும். பிறகு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அம்மொழியினை கற்பர். இலத்தீன் மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகள். ஒரு சிலர் தத்தம் அரசியல் ஆதாயத்திற்காக இல்லாத பிரச்சினையை உண்டு பண்ணியதும் இல்லாமல் அதனை ஊதி பெரிதக்கிவிட்ட்னர். இன்று அவர்களுக்கும் இது தவறு என்று தெரிந்தாலும், ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று அதனினின்று பின்வாங்க முடியாமல் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று ஒரு தவறை மறைக்க மேலும் மேலும் தவறை அடுக்கிகொண்டே செல்கிறார்கள். அதற்க்கு தங்களிடம் உள்ள அரசியல் வலிமையை பயன்படுத்துகிறார்கள். எது எப்படி இருப்பினும் நாம் அனைவரும் எவ்வித பாகுப்பாடின்றி ஒருவர் மற்றவரின் நலனில் அக்கறை கொண்டு மற்றவர் நம்மை பார்த்து வியக்கும் வகையில் வாழ எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
உலகில் நீங்கள் எங்கு சென்றாலும் முஸ்லிம் கல் அல்லா என்ற சொல்லை தவிர வேற எந்த சொல்லையும் பாவிக்க மாட்டோம் அனால் கிறிஸ்தவர்கள் தேவ இயேசு பித்த இன்னும் அந்த அந்த மொழிக்கி எட்ப பல பெயர்கள் உண்டு ……… இதில் இருந்தே உங்கள் எல்லாருக்கும் தெறித்து இருக்கும் யாருக்கு அந்த உரிமை உள்ளது என்று