எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் நியமனத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், பிகேஆர் சுல்தானை சந்திக்க விரும்புகிறது.
கட்சியின் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் தேர்வு செய்யப்படுவார் என்று இன்னும் நம்பிக்கையில் இருக்கும் பிகேஆர், அவருக்கு சிலாங்கூர் சட்டமன்றத்தில் இன்னும் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் சுல்தானுடனான சந்திப்பை விரும்புகிறது என்று கட்சியின் தலைமச் செயலாளர் சைபுடின் நசுதியான் கூறினார்.
“(வான் அஸிசாவுக்கான) ஆதரவு தெளிவாகவும் மாற்றம் ஏதுமில்லாமலும் இருக்கிறது என்பதால், பிகேஆர் சுல்தானின் ஆலோசனையைப் பெறுவதற்காக அவரை சந்திக்க விரும்புகிறது”, என்றாரவர்.
சந்திப்பதற்கான பிகேஆரின் கடைசி நிமிட கோரிக்கை வான் அஸிசாவுக்கு 56 இல் 30 சட்டமன்ற ஆதரவு இருந்த போதிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
எம்பி விவகாரத்தில் சுல்தானுடனான சந்திப்புக்கு பிகேஆர் விடும் மூன்றாவது கோரிக்கை இதுவாகும்.
இந்த கதைய பார்த்தா இப்ப அச்மீனுக்கும் ஆப்பு போல ! Dr இட்ரிசும் வேண்டாமாம் ! பாஸ் MB வந்தா தெருவெல்லாம் துணி தூக்கும் ஆர்ப்பாட்டம் !ஒரு வேளை ரோகேட்டுக்கு அடிக்குமோ லாட்டரி? அதுக்கும் உக்றேன்ல ல அடிச்சா மாதரி மிசைல் விடுவனோ ! இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நம்ப இந்தியன் எஸ்கோ என்ன ஆகும்? போய் BN உனிவெர்சிட்டில பௌண்டேசன் செயுங்களா…..நிலமாவது விக்கலாம்.
வானுக்கு 30 ஓகே !அச்மீனுக்கு 40 தா ? ராதா ரவி பாசையில கூட்டி கழிச்சி பெருக்கி பொறுக்கி பாருங்க ஒன்னும் சரிவராது செம்ம திடீர் “ஏலேக்சன்” தான் வகுத்து பிரியுங்கள். 56 ல BN 35
பார்க்காமல் இருப்பது நல்லது ,சிலாங்கூரில் தேர்தல் தேவைஇல்லை ,பணக்காரர்கள் எல்லோரும் சிலாங்க்கூரை விட்டு வேறு பகர் மாநிலங்களில் முதலிடு செய்ய வேண்டும் அப்பத்தான் பெரியவர்களுக்கு பின்னாலே மிளகாய் வச்ச மாதிரி இருக்கும் .
வான் அசிசா மந்திரி புசாராக வர வாய்ப்பே இல்லை. ஆக, பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து, சுல்தானுக்கு நெருக்கடியை தருவதை தவிர, வேறு சிறந்த வழி இல்லை.
மாநில அரசியல் சட்டத்தில், கோளாறு இருப்பதை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும் ! வெற்றி பெற போவது மக்களா ? சுல்தான என்ற கேள்விக்கு இடம் இருக்க கூடாது ?