சிலாங்கூர் பிஎன் தொடர்புக்குழு தலைவர் நோ ஒமார் இன்று ஷா அலாம் செக்சன் 18 இல் மந்திரி புசார் தேவு சம்பந்தமான நெருக்கடியில் சுல்தானுக்கு ஆதரவு தெரிவிக்க குழுமிய கூட்டத்தினருடன் கலந்து கொண்டு பேசிய போது சுல்தானின் முடிவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், சுல்தானின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் கூர்ந்து ஆராயும் போது பிஎன் மௌனமாக இருக்க முடியாது என்றார்.
“முடியாட்சிக்கு சவால் விடப்படும் போதும் மரியாதை காட்டப்படாத போதும் பிஎன் பொங்கி எழும். பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட பின்னரும் சுல்தானின் தேர்வை எதிர்க்கும் கட்சிகள் இருந்தால் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்”, என்று நோ கூறினார்.
கெராக் டாவ்லாட் என்ற அரசு சார்பற்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் 18 அரசு சார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதித்து மஞ்சல் சட்டை அணிந்திருந்த சுமார் 500 பேர் பங்கேற்றனர்.
ஆரம்பியுங்கள் உங்களுக்கு தான் அழிவுகாலம் நெருங்கிவிட்டதே !!!!
உங்கள் போராட்டதிற்கு போலிசார் அனுமதி உண்டா? தேச நிந்தனை வேண்டாம்!
இந்த மாதிரி உருட்டல் மிரட்டல் நடவடிக்கையில் இறங்குவது ஜனநாயகத் தன்மைக்கு அப்பாற்பட்டது.அமைதி என்றால் என்ன என்று பி.என்னகு கற்றுக் கொடுக்க வேண்டும் போல.
உங்களால் வெறும் 500 பேர் தான் கூட்ட முடியும் ஆனால் எங்கள் pkr ரிடம் லேட்சக்கனக்கான மக்கள் கூப்பிடாமலேயே வெள்ளம் போல் திரளுவார்கள்
உங்களால் வெறும் 500 பேர் தான் கூட்ட முடியும் ஆனால் எங்கள் pkr ரிடம் லேட்சக்கனக்கான மக்கள் கூப்பிடாமலேயே வெள்ளம் போல் திரளுவார்கள் ……. நன்றி மோகன் அவர்களே …..
இன்று குளுமிடும் வீணர்களே .முன்பு மகாதிர் அரசர்களுக்கு எதிறாக செயல்பட்டபோது உங்கள் பி.ன் என்ன கிழித்தது.
BN ஒரு தலைக்கு RM…??? கொடுக்கப்பட்டது ??? 500 பேருக்கு
என்னதான் தலையால் தண்ணீர் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்தாலும் செலாங்கொர் பாரிசான் பக்கம் திரும்புவது நம்பிக்கையற்ற ஒன்று. மாறுங்கள் இல்லையெனில் மாற்றப்படுவீர்கள் என்பது செலாங்கோரைப் பொருத்தவரைக்கும் தொடரும்.!!!!
ராம சொல்வது சரி நொருக்கு இது தெரியாதா என்ன.பேசுவதற்கு முன் இதெல்லாம் யோசிக்கணும் நோர்.