இந்த ஆண்டின் யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான தமிழ் மற்றும் கணிதம் ஆகிய தேர்வுத் தாள்களும் கசிந்துள்ளன என்று புகார் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் தஜுடின் முகமட் இசா கூறினார்.
இந்தப் புகாரை மலேசியன் எக்ஸாமினேசன் சிண்டிகேட் (எம்பிஎம்) இன்று காலை மணி 11.00 க்கு புத்ராஜெயாவில் செய்ததாக அவர் கூறினார்.
“நாங்கள் விசாரணையை தொடங்குவோம்”, என்றாரவர்.
மாணவர்கள் செப்டெம்பர் 10 இல் தமிழ் மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கான தேர்வை எழுதினர்.
தேர்வு முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகுதான் தெரிந்தா? இது ஒரு நாடகம். ஏன் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களாக கைது செய்து விசாரிக்கிறீர்கள் என இன்று தமிழ் பேப்பர்களில் செய்தி வந்ததும் இப்போது தமிழ் மொழி தாளும் ‘போச்சோர்’ என்று புது கதையை அரங்கேற்றி தங்கள் செயலுக்கு ஞாயம் தேடும் வேலை. எப்படியோ ‘எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை அது என் தலையில் போட்டதடி பழியை’ ன்னு ஆயிப்போச்சு வாத்தியாருங்க நிலமை
இதைத்தான் கறுப்பாடுகள் என்று சொன்னார்களோ? எல்லாப் பொறுப்புக்களிலும் இருப்பவர்கள் வெள்ளை ஆடுகள்! கடைசியில் கருப்பன் தான் அகப்படுவான்!
கல்வி அமைச்சர் பதவி விலகுவாரா?. இந்த யு.பி.எஸ்.ஆர். பரீட்ச்சையே இப்படியானால், வருடா வருடம் எஸ்.பி.எம். பரீட்ச்சைக் கேள்வித் தாட்கள் செம்பாயாங் ஹாஜாட் என்று சொல்லி கதவை மூடிக் கொண்டு கேள்விகளையும் விடைகளையும் கொடுத்து உதவுகின்றார்கள் என்று கிசு, கிசு வருகின்றதே, அதை அமைச்சர் அப்பனா விசாரிப்பார்?.
ஒவ்வொரு வருடமும் பல அரசாங்கப் பொதுச் சோதனைத் தாள் எப்படியோ ஒரு சில ஆசிரியர்கள் கையில் சிக்கி, மாணவர் தங்கு விடுதிகளிலும், வழிபாட்டுத் தளங்களில் பல இரகசிய மாணவர் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ‘இதுதான் கேள்வி, இதுதான் பதில்’ என்று விளக்கம் தரப்பட்ட போதெல்லாம் ‘போச்சோர்’ ஆக வில்லையாம். இவர்களுடைய அந்தரங்க நடவடிக்கைகள் ‘போச்சோர்’ ஆன பிறகு தமிழ்ப் பள்ளிகளின் வினாத் தாள்களும் ‘போச்சோர்’ ஆகி விட்டன என்று ஒப்பாரி வைக்கிறார்கள். இந்தக் கதையை நாம் நம்ப வேண்டுமாம்.
இது என்ன ஆகாயப்படை விமான ஜெட் இன்ஜின் போலவா??? இன்னொரு தமிழனை பலிகடாவாக்க???? தேர்வுத் தாள்கள் கசிவது ஆண்டாண்டு காலம் தொடரும் தொடர்கதைதானே??? இதை முடக்க ஒரு வழி, தனியார் பிரத்தியேக மையங்களை ஒடுக்குங்கள். பிரத்தியேக வகுப்புகள் பள்ளியில் மட்டும்தான் நடத்தல் வேண்டுமென்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியில் பிரத்தியேக வகுப்பில் கலந்து கொண்டால் பனி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வாருங்கள். மாற்றம் தானே வரும்.
அட போங்கப்பா . தமிழனை முன்பு வெள்ளையன் ஓட ஓட விரட்டினான் . இப்பொழுது ……….
மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்களின் பெற்றோர்கள், இதற்கு முக்கிய காரணகர்தாவாக உள்ள கல்வி அமைச்சின் மீது சட்ட எடுக்க முயல வேண்டும்…. செய்வார்களா ???
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
திருட்டுவேலை செய்தது ஆசிரியர்,கலவாடி தான் வழிநடத்தும் பள்ளி முதலிடம் பெறவேண்டி கருதி மாணவர்களை தவராக நடத்திய போதிக்கும் வர்க்கத்தை கடுமையாக தண்டிக்கவேண்டும்.போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஈபோர் தமிழ்ப்பள்ளியில் நிறைய முரண்பாடு,ஒரே பரீட்சையை இருமுறை எழுதிவுள்ளனர்,அட்டவனை கிடையாது.தேர்தல் அதிகாரி பல கட்டங்களுக்கு தொடர்புகொண்டு குழம்பிபோனார்.அட்டவணை மாற்றம் நிகழவில்லை உருதியானது.பின் எப்படி…நாராயண நாராயண.
ஆசிரியர்களின் ஆர்வக் கோளாறு. இது தவிர்க்கப் பட்டிருக்கலாம்.
மிக பெரிய தவறுதான்..அதே வேளை இந்த காரியம் எத்தனை வருடங்களாக தொடர்ந்து நடக்கிறது என்பதையும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்..!
இது மீன் பிடி …கல்வி அமைச்சனின் லிங்க நாடகம் இதில் மலாய் ஆசிரியனுங்க்கதான் முதலில் தாளை வெளியக்கினணுங்க என்பது எல்லா ஆசிரிய வர்கதக்கு தெரியும் இரண்டு வரத்திக்கு முதலே மலாய் பள்ளியில் தாள் வெளியானது வெளிச்சம் உண்மை மறுத்தால் கல்வி அமைச்சன் கான்செர் வந்து சாவான் இது சத்தியம் இவனும் பொண்டான் கமலனதணும் சேர்ந்து தமிழ் ஆசிரியர்களை கேவலபடுத்தியதுக்கு இவனை எதாவது நான் செய்வேன்
இத்தனை ஆண்டுகளாக மக்களுக்கு நல்லாட்சியைத் தரமுடியாத ‘இவன்களால்’ – .மக்களுக்கு போதுமான பாதுகாப்பைத் தரமுடியாத இவன்களால் சாதாரண யு.பி.எஸ்.ஆர் கேள்வித்தாள்களையே பத்திரமாகப் பாதுகாக்க முடியாத இவன்களால்….எந்த ஆணியைத்தான் _டுங்க முடியும்?