சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவின் பாஸ் உறுப்பினர் இஸ்கந்தர் அப்துல் சாமாட் மாநிலத்தின் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகப் போகும் காலிட் இப்ராகிம் இம்மாநிலத்தின் மிகச் சிறந்த மந்திரி புசார்களில் ஒருவர் என்று இன்று பாராட்டினார்.
இன்று சிலாங்கூர் மாநில அரசாங்க நிருவாக கட்டடத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்கந்தர் தாம் அவரை பாராட்ட விரும்புவதகாவும், அவர் மாநிலத்திற்கு 2008 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த சேவையாற்றியுள்ளார் என்றும் கூறினார்.
இன்றுடன் காலிட் இப்ராகிமின் மந்திரி புசார் பதவி முடிவிற்கு வருகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலிட்டின் இடத்தை நிரப்பவிருப்பவரின் பெயரை சிலாங்கூர் அரண்மனை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மந்திரி புசாரின் பதவிப் பிரமாணம் நாளை காலை மணி 10.00 அளவில் கிள்ளான், இஸ்தானா அலாம் ஷாவில் நடைபெறும்.
அப்பதவிக்கு அரண்மனையால் பேட்டி காணப்பட்ட மூவரில் இஸ்கந்தரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
இன்னும் ==இன்னும்=இன்னும் சிறந்த எம் . பிக்கள் வரும்காலத்தில் வந்து கொண்டே தான் இருப்பார்கள் . போக வேண்டியவர்கள் போய் தான் ஆக வேண்டும் .இது காலத்தின் உருவாக்கம் .
பாசுக்கு நிச்சயமாக எம்பி பதவியில் இடமில்லை. அப்படியே கொடுத்தாலும் நம்பிக்கையிலா தீர்மானம் எழுவது உறுதி…. முன்பு குறிப்பிட்டது போல, அசிசா இல்லையெனில், அச்மினுக்கோ அல்லது இஜோக் சட்டமன்ற உறுப்பினருக்கு இப்பதவி வந்து சேரும். ஜனநாயக மன்னராட்சிக்கே அர்த்தமின்றி அரசியல் சென்று கொண்டிருக்கிறது. ஒரு தனி நபருக்காக அரசமைப்பு சட்டத்தையே பேரம் பேசிவிட்டனர். எது எப்படி இருப்பினும் மக்கள் கொள்ளையன் அம்னோ வாயில் விழாமலிருந்தால் நலமே!!!!