பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி புதிய மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது.
பதவி சத்தியப் பிரமாணம் நாளை காலை மணி 10.00 க்கு கிள்ளான், இஸ்தானா அலம் ஷாவில் நடைபெறும்.
பதவி ஏற்ற பின்னர் அஸ்மின் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
மந்திரி புசாரின் அலுவலகத்திற்கு இந்நிகழ்ச்சி குறித்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வமான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று மந்திரி புசார் அலுவலக வட்டாரம் கூறுகிறது.
இன்றுடன் மந்திரி புசார் காலிட் இப்ராகிமின் பதவி காலம் முடிவிற்கு வருகிறது. அவர் இன்று பிற்பகல் மணி 4.00 அளவில் செய்தியாளர் கூட்டத்தில் பேசவிருக்கிறார்.
ஒரு மனிதன் என்பவர், நீதி-தர்மத்தைச் சார்ந்த சிந்தனைகளையும் செயலாக்கங்களையும் கொண்டிருக்கவேண்டும். இனம், மொழி, சமயம், கலாசாரம் மற்றும் கட்சி போன்ற சுழல்களுக்குள் சிக்கி சின்னாபின்னமாகிவிடக்கூடாது. தற்போதைய உலக ஒழுங்கு எத்தகையது? பெரும் நிறுவனங்களின் தரகர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் பல நாடுகளின் தலைவர்கள். இவர்களுக்கு (ஊழலும்)பணமும் பதவியும் மட்டுமே குறிக்கோள்களாகும். நீதி-தர்மம் சார்ந்திருக்கும் இறைசக்திகளுக்கு எதிரான சக்திகள், பல கோமாளித்தனங்களை அரங்கேற்றின. அவை தண்டிக்கப்பட்டதே வரலாறானது. நீதி-தர்மத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் நடுநிலைமை என்பது இல்லை.
அஸ்மின் அம்னோவின் மறுபதிப்பு. ஊழல் உச்சக் கட்டத்திற்கே போய் விடும். மக்கள் கூட்டணியை அடுத்த பொது தேர்தலில் தோற்கடிக்க அம்னோ போட்ட மகாத்தான வியூகம். ஆனால், இதற்குப் பின்னால் இன்னொரு வியூகம் இருக்கின்றதை அம்னோ அறியவில்லை போலும்?.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை .
அஸ்மின் அலி மந்திரி புசார் ஆக்கப்பட்டாலும், பிரச்சினை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. இது அன்வாரை பொறுத்துள்ளது. அன்வாருக்கும் அஸ்மினுக்கும் அவ்வளவாக பிரச்சினை இல்லை, காளிட்டை போல. அஸ்மினுடன் அன்வார் உட்கார்ந்து பேசி காலப்போக்கில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.
அஸ்மின் அலி ஒரு பதவி வெறி பிடித்தவர்போல் தெரிகிறது, பதவிக்காக அம்நோவுடன் சேர்ந்து பாக்காத்தானை கீழறுப்பு செய்யவும் தயங்கமாட்டார் என்று தோன்றுகிறது, பாஸ் கட்சியையும் நம்பமுடியாது, ஆகவே PKR & DAP ஆகிய கட்சிகள் மிகவும் எச்சரிக்கையாக செயல்படவேண்டும்.