துணை மந்திரி புசார்: பாஸ்சுக்கு எதுவுமே தெரியாது!

 

PAS - Khalid one of the bestபாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர் ஒருவர் சிலாங்கூர் துணை மந்திரி புசார் பதவியை ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் குறித்து விவாதித்ததே இல்லை என்று கூறுகிறார்.

சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கந்தர் சாமாட் சிலாங்கூர் துணை மந்திரி புசாராக நியமிக்கப்படவிருக்கிறார் என்பது குறித்து அவரது கருத்தைக் கேட்ட போது  “இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிய அவர், இஸ்கந்தருக்கு அது கொடுக்கப்பட்டிருந்தால், நாங்கள் (பாஸ் மத்தியக் குழு) கூடி அது பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது’, என்றாரவர்.

“நாங்கள் இஸ்கந்தருக்கு மந்திரி புசார் பதவி கிடைப்பது பற் றி பேசினோமே தவிர துணை மந்திரி புசார் பதவி பற்றி அல்ல”, என்று அவர் மேலும் கூறினார்.

பிகேஆருக்கு மந்திரி புசார் பதவியும் பாஸ்சுக்கு துணை மந்திரி புசார் பதவியும் கிடைத்தால் நல்லதுதான் என்று ஒரு சிலாங்கூர் பாஸ் தலைவர் கூறினார்.

“சிலாங்கூர் பாஸ்சை பொறுத்தவரையில் சுல்தான் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை ஏற்றுகொள்வது சிறந்ததாகும் என்பதோடு பக்கத்தான் ரக்யாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைக் களைய வேண்டும்”, என்றாரவர்.

“பக்கத்தானில் குழப்பம் இருக்கையில் நாம் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள முடியாது. பாஸ்சுக்கு மந்திரி புசார் பதவியைப் பெற முயலும் பாஸ்சின் உயர்மட்ட தலைவர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.