புதிய சிலாங்கூர் மந்திரி புசாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவதற்கு இன்னும் 24 மணிக்கும் குறைவான நேரமே இருக்கையில், அரண்மனையுடனான சண்டையை நிறுத்திக் கொள்ளுமாறு சில பிகேஆர் தலைவர்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கெடா மாநில பிகேஆர் தொகுதி தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் சுல்தான் கட்சித் தலைவர் டாக்டர் வான் அஸிசாவை எம்பியாக தேர்வு செய்தால் பெரு மகிழ்ச்சிதான் என்றனர்.
ஆனால், நாளை அவர் எம்பியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை என்றால், கட்சி இன்னொரு பிகேஆர் தலைவரின் நியமனத்தை தலைவிதி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“இன்னொரு பிகேஆர் வேட்பாளர் எம்பியாக சிலாங்கூர் சுல்தானால் தேர்வு செய்யப்பட்டால், கட்சியின் ஒட்டுமொத்த தலைமைத்துவமும் இந்த முடிவை திறந்து மனதோடு ஏற்றுக் கொண்டு கடவுள் சித்தத்திற்கு உயர் நோக்கம் உண்டென்று நம்ப வேண்டும்”, என்று அவர்கள் கூறினர்.
ஓர் அடி பின்வாங்குவது சரணடைந்து விட்டதாகாது என்று அவர்களின் அறிக்கையில் கூறியுள்ளனர்.
லூனாஸ் பிரதிநிதி அஸ்மான் நசுருடின், புக்கிட் செலம்பாவ், ஆர். கிருஷ்ணமூர்த்தி, சிடாம், ரோபர்ட் லிங், குபாங் பாசு தொகுதி தலைவர் நஸ்ருல் ஒமார், ஜெர்லுன், ஸைடி ஹசான், பெண்டாங் தலைவர் மூடா சாலே, ஜெராய் தலைவர் முகம்மட் ஸையிமுடின் ஓஸ்மான் மற்றும் ஐந்து உள்ளூர் இணைஞர் பிரிவு தலைவர்கள் ஆகியோர் அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
பிகேஆர் கெடா ,,உங்கள் மாநிலத்தை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள் ,இல்லையேல் வேற வேலை இருந்தால் போயி பாருங்கள்
கெடா மாநிலத்தில் பி கே ஆர் உருப்பட பாருங்கள் ! bn கையில் இழந்து, வந்து விட்ட…
எங்கேயாவத… இருந்தால் ஆங்கே ப…