பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் நிக் நாஸ்மி ஆகிய இருவரும் நாளை நடைபெறவிருக்கும் மந்திரி புசார் பதவி பிரமாண சடங்கின் ஒத்திகையில் பங்கேற்பதற்காக சிலாங்கூர் அரண்மையில் இருந்தனர் என்று கூறப்படுவதை மறுத்தனர்.
அவர் அரண்மனையில் இருந்ததாகக் காட்டும் ஒரு படம் ஒரு செய்தி தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது குறித்து வினவிய மலேசியாகினியிடம் அதனை அஸ்மின் மறுத்தார்.
“உண்மை இல்லை”, என்று டெக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார்.
பிகேஆர் தலைமையகத்தில் சந்தித்து கேட்ட போதும், அவர் “ஒத்திகையில் கலந்து கொள்ளவில்லை”, “நான் அழைக்கப்படவில்லலை”, என்று பதில் அளித்தார்.
அவ்வாறேம் நிக் நாஸ்மியும் கூறினார். சிலாங்கூர் சட்டமன்ற துணைத் தலைவரான அவர். “இது சரியான அறிக்கை அல்ல. நான் அரண்மனைய்இல் இல்லவே இல்லை”, என்று அவரது டிவிட்டர் இடுகையில் கூறியுள்ளார்.
நாளை காலை மணி 10.00 க்கு கிள்ளானின் நடைபெற விருக்கும் பதவி பிரமாணச் சடங்கிற்கு முன்னதாக நடத்தப்படும் ஒத்திகையில் அஸ்மின் அலி கலந்து கொள்வார் என மலேசியாகினி அறிந்துள்ளது.
இதில் எஞ்சியிருக்கும் கேள்வி இதுதான்: பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் மாநிலத்தை வழிநடத்த அஸ்மினுக்கு ஆசி வழங்குவாரா அல்லது பல சங்கடங்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையே தொடர்ந்தஅவர்களுக்கிடையிலான உறவு இத்துடன் முடிவுறுமா?
பெட்டாலிங் ஜெயா பிகேஆர் தலைமையகத்தில் மீண்டும் கேட்ட போது அஸ்மின், “நான் அங்கு இல்லை, நான் அழைக்கப்படவில்லை” என்று மீண்டும் கூறினார்.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில் தாம் அன்வாரை சந்திக்கவில்லை என்று அஸ்மின் கூறினார்.
பிகேர் அரசியல் ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்…..அன்வரா?அஸ்மினா?