புக்கிட் அந்தாரா சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
காலை மணி 10.42 க்கு சிலாங்கூர் சுல்தான் முன் அஸ்மின் அலி, 50, பதவி ஏற்றார்.
அஸ்மின் அலியின் துணைவியார் ஷம்சிடார் தஹாரின் பதவிப் பிரமாணச் சடங்கின் போது அங்கிருந்தார்.
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலில் கிடெக்ஸ் நெடுஞ்சாலை திட்டத்தை ரத்து செய்ய வழி செய்யுங்கள் mb அவர்களே ! LDP நெடுஞ்சாலை அவஸ்தை வேண்டாம் !
வாழ்த்துகள் முதலமைச்சரே! உங்கள் பதவி காலத்தில் இந்தியர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் அனைத்தும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம். உங்களின் நிர்வாகத்திறன் சிறப்பாக அமைந்து அடுத்த தேர்தலுக்குப் பின்னரும் நீங்களே பதவி வகிக்க எங்களது வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் புதிய முதல்வர் அவர்களே… சிலாங்கூரின் பழைய முதல்வர்கள் யாரும் ‘நிம்மதியாக’ வீட்டுக்குப் போனதில்லை. ஆனால் அந்த (த) சரித்திரத்தையெல்லாம் முறியடித்து எல்லா இனங்களுக்கும் ஏற்ற முதல்வராக, சிலாங்கூர் மாநிலத்தை முன்னுதாரணமாக கொண்டு அடுத்த பொதுத் தேர்தலில் மத்தியில் ஆட்சியமைக்கும் வண்ணம் உங்களின் சிலாங்கூர் மாநில ஆட்சி அமைய வாழ்த்துக்கள்!!!.
வாழ்த்துக்கள்
“தம்பி அஸ்மின் அலி” எம்பி பதவி எதனை நாளைக்கு ?? இன்னும் ஒரு மூன்று மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் ,அப்பொழுது தெரியும் உண்மையான MB அக்கா வான் அஜிசா என்று ,,,,PKR உள்ளே இருந்து கொண்டே இரட்டி வேசமா போடுறேங்க ,,இருங்க இருங்க ஆப்பு காத்து கிட்டு இருக்கு
அரசியலை இதயத்தில் வைத்து சிந்திக்ககூடாது,மூளைக்கு கொண்டுச் சென்று தெளியவேண்டும்.பிற சமுக தலைவர்கள் ஆதரவாளர்களை கண்டு நடுங்குகின்றனர்.ஆனால் நம்மவர்கள் தலைவர்களை கண்டு நடுங்குகின்றனர்.எதை எப்படி நோக்கவ்வேண்டும் என்ற சைக்கலோஜி தெரியவில்லை.சீனர் பெர்சத்துவான் முடிவுக்கு கட்டுப்படுவர்,மலாய்காரர் ஆண்மீக வாதிக்கு கட்டுப்படுவர்.அது இனத்தின் கல்வி,ஆதலாலே கல்வி மிக அவசியம்.அரசியல் கல்வி மிக அவசியம்.அரசிடம் கல்வியை யாசிக்கவும்.யாசிப்போம்.கல்வி என்றால் என்ன தெரியுமா,வாழ்க நாராயண நாமம்.
அன்வருக்கு மரண அடி,அஸ்மின் மிக பொருத்தமானவர்.கட்சிக்கு நிறை வுழைத்தவர்களை பெருமைப் படுத்தவேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
Azmin வேண்டாம் என்ற பதவியை, ஆசைவார்த்தைகளை பேசி , வலுக்கட்டாயமாக தருவதற்கு காரணம், PKR தலைவரை அசிங்க படுத்தவே ! எது நடந்தாலும் எதிர் கட்சியையே குறை கூருவர் BN அபிமானி ! ஆனால் அன்வார் நல்லவர், AZMIN க்கு வாய்ப்பு வழங்கி, சுல்தானின் யோசனையை எற்று கொண்டார். மக்கள் நலன் காக்க, அடுத்த அரசியல் நகர்வுக்கு வழி விட்டு. AZMIN இன்னொரு முன்னால் MB யாக ஆகாமல் இருந்தால் நல்லது . ஆனால் ஆசை யாரை விட்டது !
அம்னோவால் அடி உதை பட்ட புலி பதுங்குவது பாய்வதற்கே!! பொறுத்திருந்து அரசியல் விளையாட்டினை ரசிப்போம்…தராசு