டிஎபியின் தற்போதைய மத்திய செயற்குழு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயற்குழு உறுப்பினர்களின் தேர்வில் முறைகேடுகள் நடந்திருந்ததாக டிசம்பர் 2012 லிருந்து மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) கூறி வந்துள்ளது.
டிஎபியின் மத்திய செயற்குழுவிற்கு அங்கீகாரம் வழங்காமல் இருந்தது ஓர் ஆலோசனை நடவடிக்கையே தவிர அது சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியதல்ல என்று இன்று கோலாலம்பூர் உயர்நிதிமன்றத்தில் ரோஸ் கூறியது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டெம்பர் 29 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டிஎபியின் மத்திய செயற்குழு “அதன் அனைத்து நடவடிக்கைகளையும் கடமைகளையும் மேற்கொள்ளலாம்”.
ரோஸுக்கு எதிராக டிஎபி எடுத்திருந்த சட்ட நடவடிக்கையின் விளைவாக இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட இணக்கத்தை நீதிபதி ஸாலெஹா யூசுப் பதிவு செய்தார்.
அதிசயம் ஆனால் உண்மை. சந்தோசம்.