தேச நிந்தனைக்கு எதிரான அரசின் கடும் நடவடிக்கைகள் இப்போது எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது பாய்கிறது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகள் மீது விசாரிக்கப்பட விருக்கிறார்.
கோம்பாக்கில் ஓர் அரசியல் கூட்டத்தில் அன்வார் ஆற்றிய உரை இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று பிகேஆரின் சட்ட ஆலோசகர் லத்தீபா கோயா கூறினார்.
இதே பிரச்சனை மீது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியும் விசாரிக்கப்பட்டுள்ளார்.
“அஸ்மினின் வாக்குமூலம் 2011 இல் பதிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், அவர்கள் (அதிகாரிகளுதம் போலீசாரும்) இதனை மீண்டும் தொடங்குவதாகத் தெரிகிறது”, என்று லத்தீபா கூறினார்.
அன்வாரின் வாக்குமூலத்தை போலீசார் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிகேஆர் தலைமையகத்தில் பதிவு செய்வர் என்றாரவர்.
அன்வார் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் போது இதே சட்டட்தின் கீழ் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பிகேஆரின் பாடாங் செராய் நாடளுமன்ற உறுப்பினர் என்.சுரேந்திரன் அவருடன் இருப்பார்.
எல்லோருக்கும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
எதிர் தரப்பை எப்படியாகிலும் அடுத்த தேர்தலுக்கு முன் தரை மட்டமாக்கிவிட கங்கணம் கட்டிக்கொண்டு வேலை நடக்கின்றது
அன்வார் அவர்கள் அடுத்த தேர்தலில் நிற்பதை தடுப்பதற்கு இப்பொழுதே வியுகம் அமைகிறார்கள் போல் தெரிகிறது…. எது எப்படி இருப்பினும் அடுத்த தேர்தலில் BN தோல்வி அடையும் என்பது என் கணிப்பு. பொறுத்திருந்து பார்போம்.
தேச நிந்தனை சட்டம் இன்னும் அமலில் இருக்கிறது ! எழுதுபவர்கள் கவனம் !
அம்னோ என்ன பேசினாலும் தேச நிந்தனை சட்டம் ??????????
தேச நிந்தனை சட்டம் இன்னும் அமலில் இருக்கிறது ! எழுதுபவர்கள் கவனம் ! // இதனாலேயே bn படு மோசமாக தோல்வி அடைய போகிறது !
இதைத்தான் அரசியல் அநாகரிகம் என்பது. சட்டத்தைக் கொண்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது.
2011-ல் அன்வார் இப்ராகிம் கூறிய கருத்து “தேசநிந்தனை” என்று 2014-ல் தான் அரசாங்கம் கண்டு பிடிச்சிருக்குன்னா, “ஊடுருவல்” என்பது நாட்டின் பாதுகாப்புக்கு நிந்தனை என்பதை அரசாங்கம் 2020-க்குள் கண்டுபிடிக்குமா ? என்பது சந்தேகமே !