அஸ்மின் “தூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும்” எம்பியா?

 

Azmin remote controlledபிகேஆரின் தலைவர் டாக்டர் வான் அஸிசா மந்திரி புசாராக நியமிக்கப்பட்டால் அவர் “துராத்திலிருந்து இயக்கப்படும்” எம்பியாக செயல்படுவார் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. புதிதாக மாநில எம்பியாக நியமிக்கப்பட்டிருக்கும் அஸ்மின் அலி எப்படி?

கேள்விக்கு நேரடியான பதிலைத் தவிர்த்த அவர் தாம் சிலாங்கூர் மாநில அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளப் போவதாக உறுதியளித்தார்.

“நான் மாநில அரசமைப்புச் சட்டம் மற்றும் சட்டங்கள் ஆகியவற்றோடு பக்கத்தான் அங்கீகரித்துள்ள கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுவேன். அக்கொள்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன”, என்று அவர் கிள்ளானில் செய்தியாளர்களிடம் கூறினார்.

வான் அஸிசா ‘தூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும்” எம்பியாக இருந்திருப்பாரா என்ற கேள்விகளுக்கு அஸ்மின் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

“மேல் நோக்கிச் செல்வோம். முடிவு எடுக்கப்பட்டு விட்டது. நான் எனது சத்தியப் பிரமாணத்தை எடுத்துள்ளேன். அதனால், நான் அனைத்து தரப்பினருடனும் இணைந்து மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வேன்”, என்றார் அஸ்மின்.