இன்று பேராக் மாநில டிஎபி உள்துறை அமைச்சர் அஹ்மட் ஸாகிட் ஹமிடிக்கு எதிராக தேச நிந்தனை புகார் செய்துள்ளது.
நேற்று, பெங்காலான் குபோர் இடைத் தேர்தல் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தேச நிந்தனை கருத்துக்களைத் தெரிவித்ததற்காக அப்புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸாகிட்டின் பேச்சு தேச நிந்தனையானது. அது மலாய் மற்றும் சீன சமூகங்களுக்கிடையில் பிளவைத் தூண்டி விடக்கூடியது என்று பேராக் மாநில டிஎபி செயலாளர் வோங் கா வோ கூறினார்.
ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அப்புகார் செய்யப்பட்டது.
“பேராக் மாநில அரசமைப்பு விவகாரம் சம்பந்தப்பட்ட நெருக்கடியின் போது கோல கங்சாருக்கு அருகில் நடந்த ஓர் ஆர்பாட்டத்தின் போது டிஎபியினர் ராஜா மூடா (பேராக் ரீஜெண்ட்) மற்றும் அவரது காரின் மீது கற்களை எறிந்ததாக ஸாகிட் சுமத்திய குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது என்பதோடு அவசியமற்றதுமாகும்.
“ஸாகிட் அவரது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது அவர் அவரது குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுக்கொண்டு அவர் டிஎபியிடமும் பேராக் மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று அவருக்கு இதன் மூலம் சவால் விடப்படுகிறது”, என்று வோங் கூறினார்.
அமைச்சர்களுக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் போலீஸ் புகார்கள் மீது அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா என்று இன்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் உள்துறை அமைச்சர் ஹமிடிக்கு சவால் விட்டிருந்தார்.
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் புகார்கள் மீது உடனடியாக, முடிந்தால் 24 மணி நேரத்திற்குள், போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் ஹாமிடி நேற்று கடவுளிடம் சத்தியம் செய்தார்.
ஆண்டவன் பெயரால் நீங்கள் உறுதி அளித்திருக்கிறீர்கள். ஆண்டவன் என்று நீங்கள் சொன்னதால் இப்போது ஆண்டவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்!
விசாரணை இருக்கும்; ஆனால் வழக்கு வராது.
இதெல்லாம் நடக்க கூடிய காரியமா ?
அவன் பேசுவான் அனால் முடிவு இல்லை.நாயி பயன்
ஆசாமிக்கெல்லாம் சாமி மேல் நம்பிக்கை கிடையாது போல !
அப்படியே நடவடவடிக்கை எடுத்துட்டாலும்…ஹ்ஹ்ம்
விசாரணை நடக்கும். ஆதாரம் இல்லை. விசாரணை ஒரு தொடர்கதையே அம்னோ ஆட்சியில் இருக்கும்வரை…
இவன்னுக்கு தண்டனையை இறைவன் கொடுப்பார்
புகார் செய்தவர் மீது தேச நிந்தனை சட்டம் எப்படி பாய்ச்சப்பட வேண்டும் என போலீசாருக்கு இந்நேரம் உத்தரவிட்டிருப்பார், இந்த பாகன் டத்தோ ஹீரோ!
அம்னோ தலைவர்கள் தேசிய முன்னாணியை சேர்ந்த அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக யார் புகார் செய்தாலும், புகார் செய்தவருக்கு எதிராக தான் நடவடிக்கை, விசாரணை எல்லாம் நடக்கும்.இதை தான் கடந்த 57 ஆண்டுகளாக நமது போலிஸ் படை செய்துக்கொண்டிருக்கிறது.
அம்னோ குண்டர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் சொல்லலாம் -சட்டம் அவன்களை தொடாது.
மலேசியாவில் தற்பொழுது ‘சட்டம்’ என்பது ‘ரப்பர் சட்டம்’ என்றாகி விட்டது, அது “UMNOPUTRA”-க்களுக்கு மட்டுமே அவர்களுடைய தேவைகேற்ப எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும், மற்றவர்களுக்கு விரைப்பை வீராப்பாய் காட்டும்.
என்னடா வாழ்கை இது ?