பிரிட்டீஷ் வெஸ்ட்மின்ஸடர் நாளாளுமன்ற அமைவுமுறையின் கீழ் எந்த ஓர் அரசருக்கும், எலிசபெத் அரசியார் கூட, பிரதமரை தேர்வு செய்யும் அதிகாரம் கிடையாது என்று நமது நாட்டின் மூத்த வழக்குரைஞர் டோமி தோமஸ் கூறுகிறார்.
1990-1991 ஆண்டுகளில் பிரிட்டீஷ் அரசியலில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியை எடுத்துக்காட்டாக அவர் முன்வைத்தார், பிரதமர் மார்கிரேட் தேச்சரை அகற்ற விரும்பிய பிரிட்டீஷ் கன்சர்வேட்டீவ் கட்சி ஜோன் மேஜரை கட்சியின் தலைவராக நியமித்தது.
இது நடந்தும், அரசியார் தலையிடவில்லை. ஜோன் மேஜரை பிரதமராக நியமித்தார்.
“அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட அரசியான எலிசபெத் எனக்கு தேர்வு செய்யும் உரிமை உண்டு என்பதால், ‘எனக்கு மேஜரை பிடிக்கவில்லை, நான் அவர் பிரதமர் ஆவதை விரும்பவில்லை. நான் (மைக்கல்) ஹெசல்டைன் கன்சர்வேட்டீவ் கட்சிக்கு தலைமை ஏற்பதை விரும்புகிறேன் என்று கூறினாரா?
“அவர் அரமைப்புச் சட்டத்திற்குட்பட்ட அரசியார். கன்சர்வேட்டீவ் கட்சியின் தலைவரை தேர்வு செயவதில் அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது,” என்றார் தோமஸ்.
ஆஸ்திரேலியாவை பற்றி குறிப்பிட்ட தோமஸ், தொழில் கட்சியில் கெவின் ரட் மற்றும் ஜூலியா கிலார்ட் ஆகியோருக்கிடையிலான போட்டியில் ஆஸ்திரேலியாவின் கவர்னர்-ஜெனரல் தலையிடவில்லை.
“ஓர் அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட அரசரின் அதிகாரங்களைக் கொண்ட ஆஸ்திரேலிய கவர்னர்-ஜெனரல் தமக்கு உசிதப்படி முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதால் ‘கிலார்ட் நான் உம்மை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீர் ஒரு பெண் என்று அறிகிறேன் என்று கூறினாரா?’, என்று தோமஸ் வினவினார்.
தலைமை அதிகாரிகளை நியமிப்பது பற்றிய மேற்கூறப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் அமைவுமுறை குறித்த இரு எடுத்துக்காட்டுகளைப் போல் நரேந்திர மோடி வெற்றி பெற்ற போது அது குறித்து கூற இந்திய அதிபருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
“எனக்கு திரு மோடியை பிடிக்காது அல்லது அவர் உடை அணியும் பாணி எனக்கும் பிடிக்காது. எனக்கு இதர மூன்இறு பெயர்களைக் கொடுங்கள் என்று இந்திய அதிபரால் கூற இயலவில்லை”, என்று கோலாலம்பூரில் அனைத்துலக மலேசியா சட்ட மாநாட்டில் அவர் கூறினார்.
அரசமைப்புச் சட்ட பாட வகுப்புகளில் என்ன கற்பிக்கப்படுகிறது. இப்போதைய சூழ்நிலையில், குறிப்பாக சிலாங்கூர் நெருக்கடியில், என்ன கடைபிடிக்கப்படுகிறது என்று மாநாட்டில் பங்கேற்றிருந்த ஒரு வழக்குரைஞரின் கேள்விக்கு தோமஸ் மேற்கண்டவாறு கூறினார்.
பிகேஆர் அதன் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலை மந்திரி புசார் பதவிக்கு நியமித்திருந்த போதிலும், நேற்று சுல்தானின் சொந்தத் தேர்வாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி புசாராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
ஸ்காட்லாந்து தனி நாடு பிரச்னை தோல்வி கண்டதும்
அதன் நடப்பு தலைவர் /பிரதமர் பதவி விலகினார் …மிக
கண்ணியமாக !
எதையும் கீழறுப்பு பண்ணவில்லை ;நடப்பு நிர்வாகத்தை
…,இன்னும் எதையும் மாற்றவில்லை !
அவர்கள் பண்பட்டவர்கள் .!எந்த நரித்தனமும் இனி அங்கே
எழாது!
இந்த உதாரணம் போதும் ,அவர்களை மேன்மக்கள் /மேலை
நாட்டினர் என்பதற்கு ;2020 என்பதெல்லாம் வெறும் வான
வேடிக்கை ????????
வழக்குரைஞர்கள் மேற்கத்திய நாடுகளை மேற்கோளாக காட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எப்போது ஒரு நாடு தன்னை ஓர் இஸ்லாமிய நாடு என்று சொல்லுகிறதோ அப்போதே அதன் தோற்றம் மாறிவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எதைச் சொன்னாலும் அவர்கள் ஷாரியா சட்டம், திருக்குர்ஆன், இஸ்லாமிய அறிஞர்கள் என்று எதையெதையோ சொல்லித் திசைத் திருப்புவார்கள். தேச நிந்தனை என்று சொல்லி உள்ளே தள்ளுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணம். நாம் எந்த இஸ்லாமிய நாட்டைப் பார்த்தாலும் இப்படித் தானே நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக இஸ்லாமிய நாடுகளுக்கெல்லாம் சதாம் ஹுசேன் தான் முன்னுதாரணம். ஆட்சியில் உள்ளவர்கள் கடைசிகட்டத்தில் ஓடி ஒளிய வேண்டும் என்னும் போது மட்டுமே ஒரு பாதுகாப்பான மேற்கத்திய நாட்டை நாடுவார்கள்!
இன்று அம்னோ காரர்களின் நிலையே வேறு ! ராணி கண்ணில் கூட விரல் விட்டு ஆட்டுவார்கள் !
வேலுப்பிள்ளை பிரபாகரண் போராட்டம் எதை அடிப்படையாக கொண்டது,நாராயண நாராயண.
அயட் 103 படியாக எல்லாமே புருயம்