மகாதீர்: சுல்தான் வரம்பை மீறும் கட்டாயத்திற்குள்ளானார்

 

Dr.M-sultan forcedபிகேஆர் மற்றும் டிஎபி என்ற பெயர்கள் எதனையும் குறிப்பிடாமல் மந்திரி புசார் நியமன சிக்கலில் சிலர் சிலாங்கூர் சுல்தான் அவரது கடமையின் வரம்பை மீறச் செய்து விட்டனர் என்று மகாதீர் கூறினார்.

“ஆம், ஆட்சியாளர் (வரம்பை) மீறிவிட்டது போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால், இதற்கு காரணமாவர்கள் மக்கள்தான்.

“(எம்பி பதவிக்கு) அவர்கள் முறையான, அனைவரின் முழு அல்லது பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவரின், நியமனத்தோடு வந்திருந்தால், அதன் விளைவாக ஆட்சியாளர் அதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும்”, என்று மகாதீர் கூறினார்.

சிலாங்கூர் ஆட்சியாளர் தமது சொந்த வேட்பாளரை தேர்வு செய்து கொண்டுள்ளார் என்ற அதிருப்தி நிலவுவது பற்றி கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

பிகேஆர் மற்றும் டிஎபி ஆகியவற்றின் ஒரே வேட்பாளரான டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் சட்டமன்ற 56 உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவை பெற்றிருந்தாலும், பாஸ் இதில் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

எதிரணித் தலைவரான அன்வார் இப்ராகிமின் துணைவியாரான வான் அஸிசாவுடன் ஒப்பிடுகையில் அஸ்மின் அலி “தூரத்திலிருந்து குறைந்த அளவிற்குக் கட்டுப்படுத்தப்படும் எம்பி” ஆக இருப்பார் என்று மகாதீர் கூறினார்.

அஸ்மின் அலிக்கு அவர் கூறும் அறிவுரை என்ன? “சுதந்திரமாய் இரு”, என்று மகாதீர் கூறினார்.

அஸ்மின் அலி வேறு எங்கோ ஓரிடத்திலிருந்து வரும் உத்தரவுகளுக்கு செவி சாய்க்காமல் இருக்க திடம் கொண்டிருந்தால்தான், அவர் மந்திரி புசாராக செயல்பட முடியும் என்று மகாதீர் மேலும் கூறினார்.

இந்த வேறு எங்கோ ஓரிடம் என்பது அன்வாரை குறிப்பிடுகிறது என்பது தெளிவாகிறது.