சிலாங்கூர் ஆட்சிக்குழு அமைப்பதில் நெருக்கடியா?

 

Azmin the new mb1சிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் அஸ்மின் அலி அவரது ஆட்சிக்குழுவை அமைப்பதில் பெரும் தலைவலியில் சிக்கிக் கொள்வார் எனத் தெரிகிறது.

மாநில எம்பி பதவி விவகாரம் பக்கத்தான் கூட்டணி பங்காளிகளுக்கிடையிலான உறவை பாதித்துள்ளது. பாஸ் இதர பக்கத்தானுடன் மனதார உத்துழைக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.

இந்நிலையில், அஸ்மின் பாஸ்சுடனான உறவை சுமுகப்படுத்த வேண்டிய வேளையில், அவரது கட்சியில் உள்ள வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் மந்திரி புசாராவதை அவரது கட்சியினர் விரும்பவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கட்சியின் அரசியல் குழுவின் கூட்டத்தில் அஸ்மினுக்கு ஏராளமான “ஆலோசனைகளும் கருத்துகளும்” கூறப்பட்டன என்று ஒரு பிகேஆர் தலைவர் மலேசியாகினியிடம் கூறியுள்ளார்.

அவற்றில் முக்கியமானது எம்பி நெருக்கட்டியில் அவருக்கு ஆதரவாக செயல்படாத ஆட்சிக்குழு உறுப்பினர்களை அவர் மீண்டும் நியமிக்க வேண்டும் ஏனென்றால் அப்போதுதான் அவரது நிருவாகம் சமநிலையுடையதாக கருதப்படும் என்பதாகும்.

இதன்படி, இரு பெயர்கள் அடிபடுகின்றன. ஒருவர் பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவரும் தற்போதைய சட்டமன்ற துணைத் தலைவருமானAzmin the new mb2 நிக் நாஸ்மி நிக் அஹமட். மற்றொருவர் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் கான் பெய் நெய்.

இரு தவணைகளில் பதவி ஆட்சிகுழு உறுப்பினர்களாக பதவி வகித்த எலிசபெத் வோங் மற்றும் ரோட்ஸியா இஸ்மாயில் ஆகிய இருவரும் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என்று கூறப்படுகிறது.

பாஸ் தண்டிக்கப்பட வேண்டும்

அதே வேலையில், அஸ்மின் விசுவாசிகளாக அமிருடின் ஷாஆரி (பத்துமலை) மற்றும் சுகைமி ஷாப்பி (ஸ்ரீ மூடா) ஆகிய இருவருக்கும் ஆட்சிக்குழுவில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மலேசியாகினி அறிந்துள்ளது.

யாக்கோப் சபாரி (கோட்டா அங்கெரிக்) மற்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் (ஸ்ரீ அண்டலாஸ்) ஆகியோரும் ஆட்சிக்குழுவில் இடம்பெற விரும்புகின்றனர்.

Azmin the new mb3இந்திய மன்றங்களின் கூட்டணி (Gamia) பிகேஆரிலிருந்து ஓர் இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர் இருக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கை விடுத்துள்ளது. பிகேஆரின் ஒரே இந்திய பிரதிநிதி சேவியர் மட்டுமே. டிஎபி இரு பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது – வி.கணபதிராவ் (கோட்டா அலாம் ஷா) மற்றும் ரஜீவ் ரிஷியாகரன் (புக்கிட் காசிங்).

காலிட் இப்ராகிம் எம்பியாக இருந்த முதல் தவணையில் சேவியர் ஆட்சிக்குழு உறுப்பினராக ஒரு தவணைக்கு இருந்தார்.

ஆட்சிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்து நியமிக்கும் முழு உரிமையையும் அஸ்மினிடம் விட்டு விடுவதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று கூறினார்.

எம்பி நியமன விவகாரத்தில் பாஸ் தங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டதாக பிகேஆரும் டிஎபியும் கருதுகின்றன. டாக்டர் வான் அஸிசாவை ஆதரிக்க மறுத்ததற்காக அந்த இஸ்லாமிய கட்சி தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

காலிட் இப்ராகிம்மை எம்பி பதவியிலிருந்து அகற்றுவதற்கு ஆதரவு அளிக்காததால் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பாஸ் 4, பிகேஆர் மற்றும் Azmin the new mb4டிஎபி தலா 3 என்ற ஏற்பாடு மாற்றப்பட வேண்டும் என்று பிகேஆர் சிலாங்கூர் துணைத் தலைவர் ஸுரைடா கமாருடின் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான இருக்கை உதுக்கீடு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நமது முயற்சிகளுக்கு பாஸ் ஆதரவு அளிக்கவில்லை. அவர்களுக்கு ஆறுதல் இருக்கைகள் அளித்தால் போதும்.

“பாஸ் நமது எம்பி வேட்பாளரை ஆதரித்து இருந்தால், இது தேவைப்பட்டிருக்காது”, என்றாரவர்.

சிலாங்கூர் பாஸ் அதன் தற்போதைய 4 இருக்கைகளையும் வைத்துக்கொள்ள விரும்புகிறது.

சிலாங்கூர் பாஸ் இது குறித்து ஒரு கூட்டத்தை நடத்த விருக்கிறது. அதன் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

டிஎபி ஒரு கூடுதல் இருக்கையை பாஸ்சிடமிருந்து பெற விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், பெயர் கூற விரும்பாத இரு உயர்மட்ட டிஎபி தலைவர்கள் அதன் தற்போதைய எண்ணிக்கை அநேகமாக நிலைநிறுத்தப்படும் என்று மலேசியாகினியிடம் கூறினர்.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனத்திலும் சுல்தானின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அஸ்மின் இன்று சுல்தானை சந்தித்து ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியலை அவரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளார் என்றும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.