மலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் மீது சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனை வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதா என்பது பற்றி அக்டோபர் 1 இல் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் முடிவு செய்யும்.
அஸ்மின் ஷரோம் தேச நிந்தனைச் சட்டம் 1948 சட்டப்பூர்வமானதா என்ற சட்டக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இவ்வழக்கில் கோபிந்த் சிங் டியோ, அஸ்மியை பிரதிநிதிக்கிறார்.
அடக்குமுறையால் தான் இவன்கள் ஆட்சி புரிய முடியும். திருட்டு தில்லுமுல்லால் ஆட்சிக்கு வந்தால் இப்படிதான்.
மக்களிடமிருந்து ஆதரவு குறையும் வேளையில் மிரட்டியாவது ஆட்சியில் நிலைக்க இந்த பொல்லாப்பு வேலைகள் எல்லாம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் வெள்ளையன் உருவாக்கினதுதான் இந்த தேச நிந்தனை சட்டம்.நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்.சுயமாக சட்டங்களை இயற்றிக்கொள்ள தகுதியில்லையா நமக்கு?இந்த நவீன உலகில் இம்மாதிரியான காலனித்துவ சட்டங்கள் இன்னும் நமக்கு தேவைதானா?ஆளும் வர்கத்தினர் தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காலனித்துவ சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை ஒருகாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.