கைது ஆணைக்கு எதிராக நிரந்தர தடையுத்தரவு பெற்றார் ஐஜிபி

 

Indira - IGP ordered1பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்ய ஈப்போ உயர்நீதிமன்றம் அளித்திருந்த போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்காரை (ஐஜிபி) கட்டாயப்படுத்தும் மெண்டாமஸ் உத்தரவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.

இதற்கு முன்னதாக, ஐஜிபி மேல்முறையீட்டு நீதிமன்றத்திடமிருந்து பெற்றிருந்த தற்காலிக தடை உத்தரவை நீக்குமாறு இந்திரா காந்தி தாக்கல் செய்திருந்த மனுவையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐஜிபி தப்பி விட்டார்

இந்த நிரந்தர தடையுத்தரவைப் பெற்றுள்ள காலிட் அபு பாக்கார் ஈப்போ நீதிமன்ற உத்தரவின்படி ரித்துவானை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்த igpகால எல்லைக்குள் கைது செய்யத் தவறி விட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திலிருந்து இப்போது தப்பி விட்டார்.

இந்த தடை உத்தரவு அக்டோபர் 30 இல் தொடங்கும் ஈப்போ நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஐஜிபி செய்துள்ள மேல்முறையீடு வழக்கு விசாரணை வரையில் அமலிருக்கும்.

இம்முடிவு மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் முகம்மட் ராவுஸ் ஷாரிப் தலைமையில் மூவர் அடங்கிய நீதிமன்ற அமர்வால் எடுக்கப்பட்டது.

மற்ற இருவரும் நீதிபதிகள் ஸஹாரா இப்ராகிம் மற்றும் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் ஆவர்.