சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்: பாஸ் ஓர் இருக்கையை இழந்தது

Azmin-Exco list1சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் பாஸ் கட்சியிலிருந்து மூவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மாநில மந்திரி புசார் நியமன விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு கிடைத்த தண்டனையாக இது தெரிகிறது.

இதற்கு முன் அக்கட்சியைச் சேர்ந்த நால்வர் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இருப்பினும், சட்டமன்ற துணைத் தலைவர் பதவி பாஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவகையில், பாஸ் கட்சியின் “துரோகத்திற்கு” பெரும் தண்டனை எதுவும் இல்லை என்று கூறலாம்.

மாநில புதிய மந்திரி புசார் அஸ்மின் அலி அரண்மனையில் தாக்கல் செய்திருந்த ஆட்சிக்குழு Azmin-Exco list3உறுப்பினர்கள் பட்டியலுக்கு சுல்தான் நேற்று ஒப்புதல் அளித்தார்.

புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் இன்று பிற்பகல் மணி 3.00 க்கு கிள்ளான் அலம் ஷா அரண்மனையில் நடைபெறும். பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள்: (* புதியவர்கள்)

அமிருடின் ஷாரி (பிகேஆர்)*
டாரோயா அல்வி (பிகேஆர்)
எலிசபெத் வோங் (பிகேஆர்)
நிக் அஸ்மி நிக் அஹமட் (பிகேஆர்)

இஎன் யோங் ஹியன் வா (டிஎபி)
தெங் சாங் ஹிம் (டிஎபி)
வி. கணபதிராவ் (டிஎபி)

அஹமட் யூனுஸ் ஹைரி (பாஸ்)
இஸ்கந்தர் அப்துல் சாமாட் (பாஸ்)
ஸைடி அப்துல் தாலிப் (பாஸ்)