பக்கத்தானுக்காக பாஸ் செய்த தியாகம்!

 

PAS - Mustafa Ali pas sacricedசிலாங்கூர் மாநில புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களில் பாஸ் கட்சிலிருந்து மூவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். முன்பு அதற்கு நான்கு உறுப்பினர்கள் இருந்தனர். பாஸ் கட்சிக்கு நேர்ந்த இந்த இழப்பு குறித்து கருத்துரைத்த அக்கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இது இந்த மந்திரி புசார் நெருக்கடியிலிருந்து பக்கத்தான் ராக்யாட் மீட்சி பெறுவதற்கு பாஸ் கட்சி செய்த “தியாகம்” என்று கூறினார்.

“எதுவானாலும் சரி, மந்திரி புசார் ஒரு சமநிலையை ஏற்படுத்த அவரால் இயன்றதைச் செய்துள்ளார்.

“நமக்கு எது முக்கியம் என்றால் சிலாங்கூர் நெருக்கடிக்கு தீர்வு காண பாஸ் இந்த இன்னொரு தியாகத்தையும் செய்ய வேண்டியிருந்தது. அதனால் பக்கத்தான் முன்னோக்கிச் செல்ல இயலும்”, என்று முஸ்தாபாவை மேற்கோள் காட்டி ஹராக்கா டெய்லி கூறியது.

பாஸ் கட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறிய முஸ்தா, தாம் அதனை திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டதாக கூறினார்.

செய்யப்பட்டுள்ள தியாகத்தை அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், பிஎன்தான் நமது முதன்மையான எதிரி, பக்கத்தானிலுள்ள நமது பங்காளிக் கட்சிகள் அல்ல என்று வலியுறுத்தினார்.