சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் செய்து
வைக்கப்பட்டு விட்டாலும் சிலாங்கூர் அரசியல் நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை.
புதிய ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் நியமனத்திற்கு பாஸ் கட்சியின் தலைவர்
ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி
கூறியிருக்கையில், சிலாங்கூர் பாஸ் தலைவர் தாங்கள் அதற்கு
ஒப்புக்கொள்ளவேயில்லை என்று இப்போது கூறுகிறார்.
சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் பாஸ் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை நான்கிலிருந்து
மூன்ருக்கு குறைக்கபடுவதற்கு தாங்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுவதை பாஸ்
மறுக்கிறது.
பாஸ் மத்திய செயற்குழுவும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தங்களுக்கு
தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாஸ் செயலாளர் முகமட் கைருடின் ஓத்மான் கூறுகிறார்.
ஒப்புக் கொள்ளவில்லை என்றால் விலகிக்கொள்ளுங்கள். பாஸ் கட்சியைச் சார்ந்த இருவர் பதவி ஏற்க இன்றும் தயாராக இருக்கின்றனர். புதிய மந்திரி பெசார் நியமனத்திற்கு முன் பாஸ் கட்சி கொடுத்த பேதி மாத்திரையை இப்பொழுது நீதிக் கட்சி தங்களுக்கு கொடுத்திருக்கின்றது. வயிறில் புளியைக் கரைச்சி ஊற்றிய மாதிரி இருக்கா?.
விதை விதைத்தவன் விதை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
வினை விதைத்தவன் வினையை அறுப்பது காலத்தின் கட்டாயம்.துரோகச் செயலில் ஈடுபட்டு பாஸ் சிலாங்கூரின் “மந்திரி பெசார்”பதவியை கபளீகரம் செய்வதற்கு திட்டம் போட்டது.ஆனால் மார்க்கத்துக்குப் பேர் போன அவர்களுக்கு அது கைகூடவில்லை.இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த பகாதானுக்கு அவர்கள் நட்புக்கரம் நீட்டியிருக்க வேண்டும்.மாறாக துரோகச் செயலில் ஈடுபட்டனர்.அவர்களுக்கு இந்த “மூன்றே”பெரிய விஷயம்தான்.முடிந்தால் பாஸ் பக்காதானிலிருந்து களையெடுக்கப் படவேண்டும்.
எங்கு பார்த்தாலும் அடக்குமுறை கட்டு அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. அம்நோகாரன்களும் ஜால்ராக்களும் தவிர மற்றவர்களுக்கு ஆப்புதான்.
மந்திரி புசார் அவர்களே அதை விட்டு தள்ளுங்கள் காலம் கடந்த விஷயம்.மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது அதைமுதலில் கவனிக்கவும்.
நன்றி கெட்டவருக்கு மூன்றுஇடம் விசுவாச தமிழனுக்கு ஒரு இடமா ?
‘நன்றி கெட்டவருக்கு மூன்றுஇடம் விசுவாச தமிழனுக்கு ஒரு இடமா’ ஏன் தமிழனுக்கு கூடுதல் இடம் கொடுத்திருக்கலாமே..எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.
“ஓர் இனம் மட்டும்தான் இந்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற கோட்பாடு இங்குத் தேவை இல்லை!” இப்படி சிலர் கூவி கூவி ஆதரவு திரட்டுகிறார்கள்..விளங்கிடும்..இதுல நம்ம மக்கைகள் சிங் சக் தாங்க முடியலடா சாமி…..
Shanti , மக்கள் தொகைகேட்ப அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க படுகிறது ! இது கூட தெரியாமால், கேள்வி மட்டும் தான் எனக்கு கேட்ட தெரியும் என்று எழுத கூடாது!
மக்கள் தொகைகேட்ப அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க படுகிறது..இதை நான் லைக் பண்றேன்.
ஷபாஸ் ஷாந்தி,புரியும் ஆனா புரியாது.நாராயண நாராயண.
உண்மையில் மக்கள் தொகையின் அடிப்படையில் எஸ்கோ ஒதுக்கீடு செய்யப்பட்டதா?
இன்றைய வாக்காளர் பட்டியல் படி பார்த்தால் இங்கு மலாய்க்காரர்கள் 55%, சீனர்கள் 35 % இந்தியர்கள் மற்றவர்கள் 10% ஆக எஸ்கோவில் மலா- 5.5, சீன- 3.5, இந்தி- 1 என்றுத்தான் இருக்க வேண்டும். ஆனால் மலா- 6, சீன-3, இந்தி-1, ஆக உள்ளது. சீனர்களுக்கு விடுபட்டதை , சபாநாயகர் பதவி தந்தும் ஈடு கட்டி விட்டனர். ஆனால் மலாய்க்காரர் மந்திரிபுசார் மற்றும் மாநில செயலாளர், பொருளாளர், மற்றும் சட்ட ஆலோசகர்களும் சுல்தானுடன் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டுள்ளனர். ஆகவே அவர்களும் ஓட்டுப்போட அதிகாரமில்லாத ஆட்சிக்குழுவினர்தானே, அப்படிப் பார்த்தால், மலாய்க்காரர்கள் எண்ணிக்கை `10 ஆகிறதே, ஏன் அதிலே கூட இந்தியர்களுக்கு ஒரு இடம் கொடுக்கலாமே? சீனர்-பொருளாளராக , இந்தியர் சட்ட ஆலோசகராக வரக்கூடாதா? எல்லாமே ஏமாத்து வேலையப்பா!
வாணுக்கு வக்காலத்து வாங்கும் நம்மவர் ஏன் நம்மவர் எம்.பி,கேட்ககூடாது யென்று கேளும்,வாழ்க நாராயண நாமம்.
மக்கள் கூட்டனி ஆட்சிக்கு வந்தால் ஒரு வேலை நம்மவர் எம்.பி கேட்பார்கள்..