அம்னோ சீர்திருத்தப்பட வேண்டும். அப்போதுதான் அது அதன் தலைவர்களை தைரியத்தோடு குறைகூற இயலும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் இன்று கூறினார்.
தற்போது, கேள்வி எதுவும் எழுப்பாமல் அதன் தலைவர்களை ஆதரிப்பது அதன் பண்பாடாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
“ஆம். (சீர்திருத்தப்பட வேண்டும்) ஏனென்றால் தலைவர்களுக்கு மற்ற கருத்துகள் தெரிவிக்கப்பட வேண்டும். ஒரு தலைவர் தான் விரும்பியதை மட்டும் செய்ய முடியாது”, என்று புத்ராஜெயாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
என்எஸ்டிபியின் முன்னாள் முதன்மை ஆசிரியர் காடிர் ஜாசின் மிக பலவீனமாக இருக்கும் அம்னோ அதன் தற்போதைய தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கை அகற்ற முடியாது என்று கூறியிருப்பது பற்றி மகாதீரிடம் கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
தற்போதைய அம்னோவை குறை கூறும் தகுதி மகாதி[மி]ருக்கு உண்டு. காரணம், தான் பிரதமராக இருந்த சமயத்தில், மற்ற இனங்களுக்கு ‘குழி’ பறித்து, மலாய்க்காரர்களை மட்டும் முன்னுக்கு கொண்டு வந்த பெருமை அவரிடம் உள்ளது. ஆனால், ம,இ.கா. அப்படியல்ல. தற்போதைய ம.இ.கா. மிகவும் பலவீனமாக உள்ளது. இது, முன்னாள் தலைவர் சாமிவேலுவுக்கும் தெரியும். ஆனால், மகாதிமிரைப் போன்று சாமிவேலுவால் ம.இ.கா.வை குறை கூறும் தகுதி அவரிடம் இல்லை. ஏனெனில், நம் நாட்டு தமிழர்களை ‘குழி’ தோண்டி புதைத்தவர்களில் அவரும் ஒருவராயிற்றே!
சபாஸ், மகாதீர் சொல்லிட்டாறப்பா! பக்காத்தானுக்கு நல்ல காலந்தான் ! கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் மாற்று கருத்து அவசியம் என்கிறார். ஆக, ஒரு நோக்கத்தின் அடிப்படையில் வேறுப்பட்ட கருத்துகளை கொண்டிருக்கலாம் கூறலாம், அதுவே நவீன அரசியல் வழிமுறை. அதுவே சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் நடந்தது.
ஐயா மானங்கெட்ட கட்சியில் கூட (தன்)மானமுள்ளவர்கள் சிலர் ‘எதிர்த்து’ பேசுகிறார்கள். ஆனால் உம்ம கட்சியில் நீர் ஆட்சி புரிந்தபோது அவர்களை ஆட்டி வைத்ததை அவர்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்கள் இன்னும் கூட ஆடிப்போயிருக்கிறார்கள் காரணம் இப்போதெல்லாம் நீர் பேசுவதைப் பார்க்கும்போது நீர் தான் இன்னும் அவர்களுக்குத் தலைவரோ என்கிற பயம் தான்..!
SINGAM ,பிரதமராக இருந்த சமயத்தில், மற்ற இனங்களுக்கு ‘குழி’ பறித்து, மலாய்க்காரர்களை மட்டும் முன்னுக்கு கொண்டு வந்தாரே ,அதே சமமயம் உங்க சாமி வேலுவும் தமிழ் இனத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டியதுதானே
எங்க சாமிவேலு தமிழன் என்பதால், அவர் முன்னுக்கு வந்துவிட்டார்.