சிலாங்கூர் மாநில மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற வதந்தியை மறுத்த டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், டிஎபி அஸ்மின் அலிக்கு ஆதரவாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.
“அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று டிஎபிக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவ்வாறான தீர்மானம் இருந்தால் டிஎபி அதனை எதிர்க்கும். டிஎபியின் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் பிகேஆரின் துணைத் தலைவரை புதிய மந்திரி புசாராக ஆதரிக்கின்றனர்”, என்று இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
நேற்று, முன்னாள் பிரதமர் மகாதீர் புதிய சிலாங்கூர் மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது மீது கருத்துரைத்த குவான் எங் இவ்வாறு கூறினார்.
மகாதிர் அப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்பதின் உண்மையானா பொருள் அப்படியே செய்யுங்கள் என்று பாஸ் கட்சிக்கு போட்டுக் கொடுக்கின்றார். அதுதானே அவன் அப்பன் புத்தி!.
தலைவா ,அப்படினா ! அஸிசாவுக்கு நீங்கள் அளித்த ஆதரவு- அல்வாவ, மாட்டிவிட்டுடிங்களே அஜிஸ் பாரிய !