சரவாக், மூகா பிரிவிலுள்ள டாலாட்டில் ஒரு சாதாரண நீர் திட்டத்திற்கு ரிம5,000 தான் தேவைபடும். ஆனால், அதற்கு ரிம350,000 செலவாகும் என்று பொதுப்பணி இலாகா மதிப்பீடு செய்துள்ளது ஏன் என்று பொதுமக்களுக்கு மாநில கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் மைக்கல் மானின் விளக்க அளிக்க வேண்டும் என்று சரவாக் டிஎபி கேட்டுக் கொண்டுள்ளது.
“ஊழல் இங்கு அந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறதா?”, என்று சரவாக டிஎபி அமைப்பு செயலாளர் வயலெட் யோங் வினவினார்.
“பொது நிதி தவறாகவும் முறைகேடாகவும் பயன்படுத்தப்படுகிறதா என்பது பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவரது கடமை என்று மாநில மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் பாத்தீமா அப்துல்லா விடுத்துள்ள அறிக்கை மீது கருத்துரைக்கையில் வயலெட் கூறினார்.
அந்த அமைச்சரின் தொகுதியான டாலாட்டில் உள்ள ஒரு கிராமத்தில், தொடக்கத்தில் ரிம350,000 செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்த ஒரு திட்டம் ரிம5,000 க்கு கட்டி முடிக்கப்பட்டது குறித்து அமைச்சர் திகைப்படைந்ததாக கூறப்படுகிறது.
பெரிய நீர் குழாயிலிருந்து 1.6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எட்டு குடும்பங்கள் வாழும் கம்போங் மேடோங் ஹிலிர் கிராமத்திற்கு நீர் குழாய் போடுவதற்கு அளவு கடந்த செலவு ஆகும் என்பதால் அக்கிராம மக்கள் சுத்தி செய்யப்பட்ட நீர் வினியோகம் இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டனர்.
பொருளாதார பயன் ஏதுமற்ற அக்கிராமத்திற்கு ரிம350,000 செலவாகும் திட்டத்தை அமல்படுத்துவது வீணான செலவாகும் என்று பொதுப்பணி இலாகா அமைச்சர் பாதிமாவிடம் கூறியுள்ளது.
அக்கிராமத்தில் வாழும் ஒரு வணிகர் அத்திட்டத்தை ரிம5,000 க்கு முடித்துக் கொடுக்கும் சவாலை ஏற்றுக் கொண்டார்.
கடந்த வாரம் அக்கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் நீர் குழாய் போடும் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டு ஆச்சரியமடைந்தார். சில கிராம மக்களின் நிலத்தின் வழி அந்த குழாய்கள் பொருத்த வேண்டியிருந்ததால் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் அப்பணம் போதுமானதாக இருந்தது.
அத்திட்டத்திற்கான செலவு மதிப்பீடு குறித்து அமைச்சர் பாத்தீமா வெளியிட்ட தகவல் அமைச்சர் மானின் மற்றும் பொதுப்பணி இலாகவுக்கு பெருத்த அவமானமாகும் என்று வயலெட் யோங் கூறினார்.
“ரிம5,000 செலவான திட்டத்திற்கு பொதுப்பணி இலாகாவின் செலவு மதிப்பீடு ரிம350,000 – 70 மடங்கு அதிகம்!
இத்திட்டத்தை அமலாக்க ஏன் ரிம350,000 தேவைப்படுகிறது என்று வினவிய வயலெட், இத்திட்டத்தின் முழு விபரங்களையும் அறிந்துள்ள அமைச்சர் பாத்தீமா அத்துடன் நின்றுவிடக் கூடாது என்றார். இதனை அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அமைச்சர் மானின் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மேலும் கூறினார்.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை, பதவி நீக்கம் உட்பட, எடுக்கப்பட வேண்டும் என்றாரவர்.
வெளிப்படையான நிலைப்பாடு இல்லாததன் காரணமாக பல மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இது ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் வெளியிடப்படுகிறது.
மாநில பாரிசான் அரசாங்கம் டிஎபி மேற்கொண்டுள்ள “இம்பியான் சரவாக்” திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் செலவீனங்கள் அதிகப்படுத்தப்படுவதில்லை. நிச்சயமாக, அவற்றில் தனிப்பட்ட இலாபம் அல்லது நலன்களுக்கு இடமில்லை”, என்று வயலெட் யோங் வலியுறுத்திக் கூறினார்.
இந்த அம்மா என்ன வேறொரு உலகத்தில் வாழுகின்றதாக நினைப்பா?. அரசாங்க குத்தகை என்றாலே கிம்பளம் என்ற ஒன்றும் சேர்ந்தே வரும் என்பதை தெரியாமல் அறிக்கை விட்டு தனது அரசியல் அறியாமையை புலப்படுத்துகின்ராரோ?. நாங்க பார்க்காத அரசாங்க குதைகையா. ஆலோசனை வேண்டுமானால் நம்ப தானைத் தலைவரை அனுப்பி வைக்கின்றோம். “ஆ” முதல் “ன்” வரை சுத்தமா விளக்கி சொல்லுவாரு.
தாயே! உங்க முன்னாள் முதலமைச்சர் முகம்மது தாயிப் மஹ்முட், உலக பணக்காரர்களில் அவரும் ஒருவர். எப்படி? நான் சரவாக்கில் இருந்தபோது, அங்குள்ள மக்கள் சரவாவை Bumi Kenyalang என்று சொல்ல மாட்டார்கள், BUMI TAIB என்றுதான் சொல்வார்கள், அங்குள்ள REJANG ஆற்றில் மட்டுமல்ல, ஆட்சியிலும் பெரிய பெரிய ‘முதலைகள்.’
உலக மகா கொள்ளைடா சாமி.
மக்கள் வரி ஒழுங்காகவும் ஒழுக்கமாகவும் செலவு செய்யப்பட்டால் அடுத்த ஆண்டு அமுலுக்கு வரவிருக்கும் பொருள் சேவை வரி அவசிமில்லை. 70 காசு பேனா 2.50 ரிங்கிட்டுக்கும் 4500.00 ரிங்கிட் ( உண்மை விலை ரிங்2500.00) விலை கொண்ட மடி கண்ணி ரிங் 42,000.00 க்கு வாங்கப்பட்டது அம்பலத்திற்கு வந்ததை அநேகர் மறந்திருக்க சாத்தியமில்லை. மாடு வாங்குவதற்கு 250 மில்லியன்.இந்த மாடுகள் சொகுசு அடுக்குமாடி மனைகளில் வளர்கப்படுவதாக சொல்லப்பட்டது.அனால் இதுவரை யாரும் கண்டதாக தெரியவில்லை.,நீர் மூழ்கி கப்பல் என்ற பெயரில் நீரில் மூழ்காத இரண்டு கப்பல்கள் பல பில்லியன் செலவில் வாங்கப்பட்டது. இது எல்லாம் கூட்டி கழித்து பார்க்கும் போது ரிங் 350,000.00 நமது அரசாங்கத்திற்கு சாதாரணம் அம்மா!
இதில் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்ற்மே இல்லை. இதுவே அந்நாளில்இருந்து நடைமுறையில் இருக்கின்றது— கேட்பதற்கு நாதி இல்லை. இங்கு இன வாரியான அரசியல் இருக்கும் வரை மதத்தின் பேரால் பிரிவினை இருக்கும் வரை ஊழல்களும் கொள்ளைகளுக்கும் குறைவே இருக்காது. அத்துடன் நாணயம் இல்லா அரசியல் வாதிகள் ஆட்சியில் தில்லுமுல்லு செய்து உட்கார்ந்து இருப்பதால் எல்லாமே நடக்கும்.
சாந்தி எங்கே ??????????
சாந்தி திருந்திடாங்க !!