சைமன்: மலேசிய ஒப்பந்தம் சட்டப்படி செல்லதக்கது அல்ல

 

Simon-Malaysia agreement voidசிங்கப்பூர் மலேசியாவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மலேசிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கழகத்தின் (சுஹாகாம்) முன்னாள் உதவித் தலைவர் சைமன் சிபவுன் கூறுகிறார்.

மலேசிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஐந்து தரப்பினரில் ஒன்றான சிங்கப்பூர் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டு விட்டது அந்த ஒப்பந்தம் செல்லத்தக்தக்கதல்ல என்பதற்கான காரணம் என்று அவர் “Revisiting the Malaysia Agreement 1963” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறினார்.

யுனைட்டெட் கிங்டம், மலாயா. சாபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையில் 1963 ஆம் ஆண்டில் மலேசியா ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அதன் அடிப்படையில் நான்கு நாடுகள் இணைந்து மலேசியா என்ற சுதந்திர நாடு உருவாக்கப்பட்டது.

“அந்த ஒப்பந்தம் (இன்னும்) செல்லத்தக்கது என்று சிலர் கூறுகின்றனர். சிலர் இல்லை என்று கூறுகின்றனர். அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட Simon-Malaysia agreement void1வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்”, என்று நெகாராகு என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கலந்துறையாடல் நிகழ்ச்சியில் கூறினார்.

அந்த ஒப்பந்தம் மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“இது அரசாங்கம் இதனைச் செய்ய தயாராக இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்றாகாது. ஆனால், தேசநிந்தனைச் சட்டத்தை காட்டி மக்களை பயமுறுத்துவதை விட, அரசாங்கம் மக்களை புரிந்து கொள்ள முயல வேண்டும்.

“மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும்?”, என்று அவர் வினவினார்.

நெகாராகு அமைப்பின் புரவலர்களில் ஒருவரான சைமன், சாபா மற்றும் சரவாக் ஆகியவற்றின் எதிர்காலம் மலேசியாவுடனானதுதான் என்று நம்புவதாக கூறினார்.

“நாம் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டியதில்லை. நமக்கு தேவைப்படுவது அரசாங்கம் நம்மை நியாயமாக நடத்த வேண்டும் என்பதுதான்”, என்றாரவர்.

மக்களுக்குத் தெரியாதை சொல்லிக் கொடுக்காதீர்

ஸ்டார் சாபா தலைவர் ஜெப்ரி கெட்டிங்கான் இந்த ஒப்பந்தம் குறித்து மகாதீர் தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்தார்.

“மக்களுக்குத் தெரியாததை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முயல வேண்டாம் என்று அவர் (மகாதீர்) என்னிடம் கூறினார். நான் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது போலீசும் (கூட) மக்களுக்கு வரலாறு போதிக்க வேண்டாம் என்று என்னிடம் கூறிற்று”, என்றார்.

“அரசாங்கம் செவி சாய்ப்பதில்லை”

இன்றுள்ள அரசமைப்புச் சட்டம் மலாயா அரசமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டிய ஜெப்ரிங்கான் Simon-Malaysia agreement void2மலேசிய ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார்.

“அரசாங்கம் செவி சாய்ப்பதில்லை என்பதால் விரக்தியடைந்துள்ள மக்கள் கூச்சலிடுகின்றனர். அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களின் உரிமைகள். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் பிரிவினைவாதிகள் மற்றும் பிரிந்து செல்லும் உரிமை கோருபவர்கள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர்”, என்று அவர் கூறினார்.

இக்கலந்துரையாடலில் பேசிய யுகேஎம் ஆய்வாளர் ஹெலன் திங் தேசிய ஒருமைப்பாட்டிற்கு சவாலாக இருப்பது சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்று குறிப்பிட்டார்.