பிகேஆர் எம்பி: நான் சுல்தானை அவமதிக்கவில்லையே

Dr.M-sultan forcedசிலாங்கூர் மாநிலத்தில் இன்னொரு மந்திரி புசார் நெருக்கடி ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் அரசமைப்புச் சட்டத்தை சீர்திருத்த வேண்டும் என்று கூறிய பிகேஆர் அலோர் செதார் நாடாளுமன்ற உறுப்பினர் கூய் ஹிசியாவ் லியுங் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார்.

ஆனால், இது அவர் தொடர்ந்து மலேசிய அரசமைப்புச் சட்டத்தை நாட்டின் முதன்மைச் சட்டம் என்று தற்காத்து பேசுவதற்கும் அதனை நிலைநிறுத்துவதற்கும் தடையாக இல்லை.

“நான் சுல்தானை அவமதிக்கவே இல்லை. அவர் அஸ்மின் அலியை சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக நியமித்த முடிவையும் நான் எதிர்க்கவில்லை”, என்று கூய் ஓர் அறிக்கையில் கூறினார்.

கோத்தா ராஜா அம்னோ இளைஞர் பிரிவு அவர் மந்திரி புசார் நியமனத்தில் இன்னொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்க சிலாங்கூர் மாநில அரசமைப்புச் சட்டம் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று செப்டெம்பர் 24 இல் கூறியிருந்ததற்கு எதிராக போலீஸ் செய்துள்ளதைக் குறிப்பிட்டார்.

புதிய எம்பியாக அஸ்மின் அலியை நியமிக்க சுல்தான் எடுத்திருந்த முடிவு குறித்து கூய் கேள்வி எழுப்பியதாகவும், அது சுல்தானை அவமதிப்பதாகும் என்றும் கூறப்படுகிறது.

சுல்தானின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கோருவது தேச நிந்தனைச் செயல் என்று அவருக்கு எதிராக கூறப்படுகிறது.

MP Gooiவழக்குரைஞரான கூய், தமது அறிக்கை சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகமட் முனிர் பாணி அளித்திருந்த விளக்கத்திற்கான எதிர்வினை ஆகும் என்றார்.

“நாட்டிலுள்ள பலரைப் போல், அரண்மனை எவ்வாறு இந்த முடிவிற்கு வந்தது என்பதைப் புரிந்து கொள்ளவே நான் முற்பட்டேன்.

எதிர்காலத்தில் இது போன்ற நெருக்கடியைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தாம் சிலாங்கூர் மாநில அரசமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் அஸ்மின் அலியை வற்புறுத்தியதாக கூய் மேலும் கூறினார்.

ஒரு மறுபரிசீலனை தேவையா என்பதை தீர்மானிக்க வேண்டியது முற்றிலும் மாநில அரசு தீர்மானிக்க வேண்டிய ஒன்றாகும் என்று கூய் கூறினார்.