சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை மாநிலப் பொருளாதார ஆலோசகராக தொடர்ந்து வைத்திருப்பார். அதற்கு சம்பளமாக அன்வாருக்கு மாதம் ரிம1 வழங்கப்படும்.
மாநிலப் பொருளாதார ஆலோசகரின் அலுவலகத்தை மூடியதுதான் முன்னாள் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் பதவியிலிருந்து விலகுவதற்குமுன் செய்த கடைசி காரியமாகும்.
தம்மீது கொண்ட ஆத்திரத்தால்தான் காலிட் அவ்வாறு செய்ததாக அன்வார் கூறினார்.
இதனிடையே, அன்வார் பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து விலக்கப்படவில்லை என்பதை அஸ்மின் தெளிவுபடுத்தியுள்ளார்.
“செப்டம்பர் 22 கூட்டக் குறிப்புகள், பொருளாதார ஆலோசகரின் அலுவலகத்தை மூடுவதென முடிவு செய்யப்பட்டதாக மட்டுமே குறிப்பிடுகின்றன”, என்றாரவர்.
பாத்து நடந்துக்க தலைவா உங்களை சுற்றி நிறைய பசும் தோல் போட்றிய நரிகள் நிறைய இருக்கிறாங்கள் !!!!!
இதற்குதனே ஆசைபட்டாய் பாலகுமாரா…
அன்வார் அவர்கள் என்ன சொல்ல போகிறார் ரோன் 95 விலை ஏற்றத்திற்கு…?
இருப்பதுதான் செலங்கோர் வாழ் மக்களுக்கு நல்லது
அப்படி என்ன செய்துவிடுவார்..தெரு ஆர்ப்பாட்டம்தான் ..மாமா கொஞ்சம் பயம் இருக்கும் எங்கேடா தேச நிந்தனை சட்டத்தில் உள்ளே போய்விடுவார் என்று.