மீண்டும் எரிபொருள் விலையேற்றம் காண்கின்றது. இன்று நள்ளிரவு தொடங்கி ரோன்95 மற்றும் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 20 சென் ஏற்றம் காண்கிறது.
இன்று மாலை இந்த அறிவிப்பை உள்நாட்டு வாணிகம், பயன்பாட்டாளர் விவகாரம் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான அமைச்சு செய்தது.
தற்போது, ஒரு லீட்டர் ரோன் ரிம2.10 க்கும், டீசல் ரிம2 க்கும் விற்கப்படுகிறது. ரோன் விலை ஏற்றம் 9.5 விழுக்காடு, டீசல் 10 விழுக்காடு ஏற்றம் காண்கின்றது.
செத்தான்கப்பா மலேசியா சிறிய வருமானம் பெரும் மக்கள் ????
இதைப் பற்றியெல்லாம் கேள்விக் கேட்கக் கூடாது என்பதற்காகத்தானே சமீபத்திய கைது நடவடிக்கைகள்!
BANTUAN என்ற பெயரில் லஞ்சத்தை பெற்ற மக்களிடமிருந்து,
அந்த லஞ்சத்தை திரும்ப பெற அரசாங்கம் இப்படியொரு தந்திரத்தை கையாளும் என்று BANTUAN என்ற பெயரில் லஞ்சத்தை பெற்ற மக்கள் கனவில்கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்,
மலேசிய அரசாங்கத்தின் BANTUAN என்ற லஞ்சம் வாழ்க !!!
BUDAYA RASUAH 1 MALAYSIA (BRIM) வளர்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
BANTUAN என்ற பெயரில் லஞ்சத்தை பெற்ற மக்களிடமிருந்து,
அந்த லஞ்சத்தை திரும்ப பெற அரசாங்கம் இப்படியொரு தந்திரத்தை கையாளும் என்று BANTUAN என்ற பெயரில் லஞ்சத்தை பெற்ற மக்கள் கனவில்கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்,
மலேசிய அரசாங்கத்தின் BANTUAN என்ற லஞ்சம் வாழ்க !!!
BUDAYA RASUAH 1 MALAYSIA (BRIM) வளர்க $$$$$$$$$$$$$$$$$
இந்த அரசாங்கம் மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை ! எல்லாம் bn இஷ்டம் ! அன்வார் பெட்ரோல் விலை குறைப்பேன் என்று வாக்கு கொடுத்தார் மக்கள் நம்பவில்லை இன்று அவஸ்தை படுங்கள் !
BUDAYA RASUAH 1 MALAYSIA (BRIM) வளர்க $$$$$$$$$$$$$$$$$
இதற்குக்கூட ‘நமது’ மக்களில் சிலர் இங்கே சப்பைக்கட்டு கட்டி வக்காலத்து வாங்க முன்வருவார்களே…
Shanti , இதற்க்கு என்ன சொல்ல போகிறிர்கள் ?
சாவுங்கட
வாழ்க பாரிசான் ….வாழ்க நஜிப் …….போடுங்கள் ஒட்டு பாரிசானுக்கே
எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது. பெட்ரோல் விலை ஏற்றத்தால், இனிமேல் அரசு அதிகாரிகள், அலுவலகங்களுக்கு சைக்கிளில் வரவேண்டும் என பெர்லிஸ் மந்திரி புசார் ஆணையிட்டிருந்தார். அதேபோல், இனிமேல் பார்லிமெண்டுக்கு வருவோரெல்லாம் மோட்டார் சைக்கிளில் தான் வரவேண்டும் என நஜிப் கட்டளை இடுவாறேயானால், ஒரு பயலும் தேர்தலில் நிற்கமாட்டான்.
லஞ்சத்தை ஒழித்திருந்தால் பெற்றோலுக்கான உதவித் தொகையை அரசாங்கம் குறைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.கிட்டத் தட்ட அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது.அதனை தடுத்து நிறுத்தினால் அரசாங்கத்தின் பல “முதலைகளின் ” கருப்பு பண வருவாய் பாதிக்கும்.அதற்காகவே சாதாரண மக்களின் தலையில் சுமையை சுமக்க வைத்து விட்டார்கள்.இந்த நாட்டில் எந்த ஒரு சலுகையும் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஏழை சமூகமான இந்திய சமூகம் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகப் போகிறது.இங்கு பெரிய அளவில் பண வீக்கம் இல்லாவிட்டாலும் இந்திய சமூகத்தைப் பொறுத்தவரையில் நக்கி நாராயனாதான்.
இவனுங்க எல்லாம் அடிமட்ட மக்களைப் பற்றி கவலைப்படவே மாட்டானுங்களா? தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் நிலையைப் பற்றி இந்த தேசிய முன்னணி அரசாங்கம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது. அரசாங்க வேளையில் இருப்பவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களிடமிருந்து வரி என்ற பெயரில் பிடுங்கி போனசாக கொடுக்கும் இந்த அரசாங்கம், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு என்னத்தை செய்துள்ளது. இப்போதுள்ள விலைவாசியில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எப்படியெல்லாம் செத்துக்கொண்டிருக்கின்றனர் என்று இந்த மலேசியா அரசாங்கத்துக்கு தெரியுமா? இந்த பெட்ரோல் விலையேற்றத்தால் ஒரு காருக்கு சராசரி ரிங்கிட் மலேசியா 8 உயர்ந்துள்ளது. மக்களுக்கு BRIM கொடுத்து அதை சாதுர்யமான வகையில் திரும்ப பிடுங்கிக்கொள்வதில் மலேசிய அரசாங்கத்துக்கு நிகர் வேறில்லை. இன்னும் இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாறாதீர்கள் மக்களே. சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள்.
மலேசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதற்கு இது ஒரு முன்னெச்சரிக்கையே என்பதனை மறந்து விடாதீர்கள். 1MDB – ல் முதலீடு செய்த மத்திய ஆசிய முடியாட்சி நாடுகளின் முதலீட்டு நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்த 3 பில்லியன் பணத்தை திருப்பிக் கொடுக்க கேட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்களை மேற்கோள் காட்டி இங்கே செய்தி வெளியிடப்பட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் எவ்வொரு பெரிய மாற்றமும் இல்லாத நிலையில் இங்கே எண்ணெய் மானியத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் என்ன?. வேற்றொரு இடத்தில் பட்ட கடனை அவசரமாக அடைக்க வழி இல்லாமல் இங்கே மக்கள் பணத்தைப் பெற்று இவர்களின் ஓட்டையை அடைக்கின்றனர். ஓட்டைக் கப்பல் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை!. நமது நாட்டின் பொருளாதாரத்தில் விரைவில் பெரிய சூறாவளி வீசப் போகின்றது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. மழை வருமுன் குடையைத் தேடி வைத்துக் கொண்டவர்களே இந்நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்.
அவன் கொடுக்கும் பணம் குறை சொல்லாம குடும்பத்தில யாளர் போரையும் எழுதி போடுவாங்க அவன் கொடுக்கும் லஞ்ச பணதை வங்கி விருந்து வச்சி தின்னுவாங்க அப்பூரம் நோட்டை சொல்லுவாங்க
உண்மை தன் சந்திர அவர்களா,தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் நிலையைப் பற்றி இந்த தேசிய முன்னணி அரசாங்கம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது. அரசாங்க வேளையில் இருப்பவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களிடமிருந்து வரி என்ற பெயரில் பிடுங்கி போனசாக கொடுக்கும் இந்த அரசாங்கம், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு என்னத்தை செய்துள்ளது.
நாரப்பயல் ஊரு இது ,,,BRITISH அரசாங்கம் நாட்டை மீண்டும் கைப்பற்ற வேண்டும் ,இந்த நாட்டில் கு… மலை பொழிய வேண்டும் ,,தொல்லில்லாத வாழைப்பழங்கள் எல்லாம் ஒழிய வேண்டும்
பயனீட்டாளர்களின் உரிமைக்காகப் ‘போராடும்’ பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் இட்ரிஸ் இந்த விலையேற்றத்தை நியாயப்படுத்தி உள்ளார்(?). இந்த விலையேற்றத்தை அடுத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து சாமான்ய மக்களுக்கு பெருஞ்சுமையாகப் போவது இவருக்குத் தெரியாதா? அல்லது வழக்கம் போல, ‘அத்தியாவசியப் பொருள்கள் விலை உயரக்கூடாது’ என்று இவர் பங்குக்கு ஒரு கூப்பாடு போடுவதோடு அமைதியாகிவிடுவாரா?