மலேசியாகினிக்கு நாளிதழ் வெளியிடும் உரிமை உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ள போதிலும் அரசாங்கம் பிரசுர உரிமம் கொடுக்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
கடந்த வாரம், உள்துறை அமைச்சு தலைமை செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரனுக்கு அனுப்பிய கடிதத்தில், “மலேசியாகினி சர்ச்சையை உண்டுபண்னும் செய்திகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாலும் நடுநிலைமை பிறழ்ந்து செய்திகளை வெளியிடுவதாலும் அதற்கான பிரசுர உரிமையை நிராகரிக்க முடிவு செய்திருப்பதாக”க் கூறியது.
அதன் செய்திகள் “தேசிய தலைவர்களுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தலாம்” என்பதையும் உள்துறை அமைச்சின் பிரசுர கட்டுப்பாட்டு, அல்குர்ஆன் வாசகப் பிரிவின் தலைவர் ஹஷிமா நிக் ஜப்பார் வலியுறுத்தி இருந்தார்.
உள்துறை அமைச்சின் முடிவை எதிர்த்து மீண்டும் முறையீடு செய்யப்போவதாகவும் , இம்முறை பிரசுர உரிமை கொடுக்க நீதிமன்றம் அரசாங்கத்துக்கு உத்தரவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் மலேசியாகினி தலைமை செய்தியாசிரியர் ஸ்டீபன் கான் கூறினார்.
மலேசியாகினிக்கு நாளிதழ் பிரசுரிமை கிடைத்து விட்டால்
மலேசியா மக்களுக்கு அது ஒரு பொற்காலம் ,ஆறு பத்திரிகைகள் தேவையற்ற கருத்தை செய்தி என்ற போர்வையில் வெளியிட்டு சமுதாயத்தை சீரழித்து வருகின்றனர் ,ஆனால் நிருபர்களுக்கு மலேசியாகினி
முறையான மாத சம்பளத்தை போடுவார்களா அல்லது
தினக்குரல் பத்திரிக்கையை போல நிருபர்களுக்கு சம்பளத்தை போடாமல் இழுக்கடிப்பார்களா , நைனா