ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ள வேளையில் திடீரென எண்ணெய் விலையை உயர்த்திய அரசாங்கத்தை பாஸ் தலைவர்கள் சாடியுள்ளனர்.
பிஎன் 13வது பொதுத் தேர்தலில் வென்ற பின்னர் ஏற்பட்டுள்ள இரண்டாவது விலையேற்றம் இதுவென சரவாக் பாஸ் துணை ஆணையர் ஜொப்ரி ஜராயீ இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“முஸ்லிம்கள் தியாகத் திருநாளைக் கொண்டாடும் வேளையில் ரோன்95 மற்றும் டீசல் திடீரென்று லிட்டருக்கு 20 சென் விலை உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது”, என்றாரவர்.
எரிபொருள் விலை உயர்வால் மற்ற பொருள்கள், சேவைகளின் விலையும் உயரப் போகிறது என வேதனையுடன் குறிப்பிட்டார் ஜொப்ரி.
ஹாரி ராயா பரிசல்ல.அது அரசாங்கம் இந்திய மகளுக்காக கொடுத்த தீபாவளி பரிசு.வாழ்க பி.என்.வளர்க மலேசிய முட்டாளர்களின் கட்சி.
தீபாவளி நேரத்தில் மலேசிய மக்களுக்கு போனஸ்,ஹெபி இன்று முதல் ஹெபி…
ஐயா காணாமல் போன ‘அதை’ இன்னும் தேடுகிறார்களே..அந்த செலவை ஈடுசெய்வது எப்படி? இப்படித்தானே? இந்த விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றம் காண்பதும் சாமன்ய மக்கள் அல்லல்படப்போவதும் உண்மை. விரைவில் சம்மந்தப்பட்ட மந்திரி சொல்வார்: ‘பெட்ரோல் விலை ஏறவில்லை உதவித்தொகைதான் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் மற்ற பொருள்கள் விலையேற்றம் காணவில்லை’ என்று. அதையும் நாம் நம்பி வி(கெ)டுவோம்..கொஞ்ச நாளில் இந்த விலையேற்றத்தை நாம் மறந்துவிடுவோம். மலேசியர்களுக்கு ஞாபக மறதி அதிகமாச்சே…
20 காசுதானே, மகளைப் ப்ற்றி இப்போ எல்லாம் எவன் கவலை டுரான். முடிஞ்ச வரைக்கும் ஏழைகள் கிட்ட இருந்து சுறண்டத் தானே எல்லாம் அரசியலுக்கு வர்ரானுங்க. எவனுக்கும் மக்களுக்கு சேவை செய்ய மாட்டனுங்க, ஆனா மகளுக்கு செய்வானுங்க. செருப்பால அடிக்க வேண்டும் இந்த அரசியல் குள்ளநரிகளை.
தி மேகிங் ஒப் அனாதர் அர்ஜென்டினா போல் தோன்றுகிறது!!!