தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மலாயாப் பல்கலைக்கழக சட்டப் பேராசியர் அஸ்மி, நேற்றிரவு யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா(யுகேஎம்)வுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அஸ்மி தேச நிந்தனைச் சட்டம் பற்றி மாணவர்களிடையே உரையாற்ற அங்கு சென்றார் என்றும் ஆனால் அவர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்றும் காபோங்கான் மஹாசிஸ்வா யுகேஎம் கூறியது.
புதிய மாணவர்களுக்கான வரவேற்பின் ஒரு பகுதியாக அஸ்மியின் உரைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் ஆனால், தொடக்கத்திலிருந்தே அந்நிகழ்வைத் தடுத்து நிறுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் முயன்று வந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.
“பிறகு வேறு வழியில்லாமல், அந்நிகழ்வை கேடிஎம் நிலையத்துக்கு எதிரே இருந்த வெட்டவெளியில் நடத்தினோம். போலீசின் கண்காணிப்பில் உரை நிகழ்ச்சி தொடர்ந்தது”, என காபோங்கான் மஹாசிஸ்வா யுகேஎம் ஓர் அறிக்கையில் கூறியது.