டைம்ஸின் 200 தலைசிறந்த உலகப் பல்கலைக்கழகங்களின் ஆண்டுப் பட்டியலில் இவ்வாண்டும் மலேசியப் பல்கலக்கழகம் எதுவும் இடம்பெறவில்லை.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), உலகின் தலைசிறந்த 25 பல்கலைக்கழகங்களின் வரிசையில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இரண்டே இரண்டு ஆசியப் பல்கலைக்கழகங்கள்தாம் இடம் பிடித்துள்ளன. ஒன்று என்யுஎஸ் மற்றது தோக்கியோ பல்கலைக்கழகம்.
இது மலேசியப் பலகலைக்கழகங்களுக்கு இரட்டை அடியாகும். கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட 100 ஆசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில்கூட மலேசியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெறவில்லை. என்யுஎஸ் அதில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது.
இந்த அறிக்கை பற்றிக் கருத்துரைத்த டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், இது, மலேசியா உலகின் சிறந்த கல்வி முறையைக் கொண்டிருப்பதாக பெருமை பேசிக் கொண்டிருக்கும் கல்வி அமைச்சர் முகைதின் யாசினுக்குக் கிடைத்த ஒரு பலமான அடி என்று குறிப்பிட்டார்.
“இவ்வாண்டும் மலேசியப் பல்கலைக்கழங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை……மலாயாப் பல்கலைக்கழகத்துடன் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்ட என்யுஎஸ் உலகின் 25 தலைசிறந்த பல்கலைக்கழங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது……பீற்றிக்கொண்டாரே முகைதின்… இப்போது அவரின் மூக்கு உடைபட்டிருக்கும்”, என லிம் கூறினார்.
மலேசியாவின் தோல்விக்கு ஐந்தாண்டுகளுக்கு மேலாகக் கல்வி அமைச்சராகவுள்ள முகைதின்தான் பொறுப்பு என்றாரவர்.
கின்னஸ் சாதனைக்கு மனுச் செய்யலாமே!
இந்த அவமானத்திற்கு கல்வி அமைச்சர் தூக்கில் தொங்கவேண்டாம். குறைந்த பட்சம் தனது பதவியை இராஜினாமா செய்வாரேயானால், அடுத்து வரும் கல்வி அமைச்சர் பொறுப்புடன் செயலாற்றுவார். மற்றொரு விஷயம். இது மலேசியர்களுக்கு அவமானமாகாது. மலாய்க்காரர்களுக்கு மட்டுமே. ஏனென்றால். நமது கல்வியமைச்சர் முதலில் மலாய்க்காரர். பிறகுதான் மலேசியர். ஹ….ஹா…
இந்த விபரத்தை டைம்ஸ் அமைப்பு சொல்லி தெரிய தேயில்லை. நம் நாட்டில் உள்ள நல்ல படித்தவர்களுக்கும்,தம் பிள்ளைகளை கல்வி கற்க பள்ளிகளுக்கு அனுப்பும் ஒவ்வொரு பெற்றோகளுக்கும் நன்கு தெரியும் நம் நாட்டு கல்வி முறை கீழ் நோக்கி சென்றுகொண்டிருப்பதை.
தேசிய மொழியை அறிய வேண்டும்,பேசவேண்டும்.பயன்படுத்த வேண்டும்,தேசிய மொழியை காதல் செய்யுங்கள் என்று அறிவிப்பு செய்து, உலக மொழியை அகற்றி, அதற்கு பதிலாக அராப் மொழியை பல இடங்களில்,அரசாங்க முகப்புகளில்,சாலை குறிப்புகளில் முதன்மை மொழியாக அராப் மொழியிலும் இரண்டாவது மொழியாக தேசியமொழி பயன்படுத்தி உள்ளதை கண்டு வியப்பு அடைந்தவர்களில் நானும் ஒருவன் .
நமது பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தில் ‘கிராணி’ வேலை செய்ய மாணவர்களைத் தயார் செய்கின்றனர். இவர்களைப் போய்…….உலகத்தரம்……தலைசிறந்த …….என்று சொல்லி பயமுறுத்துகிறீர்களே!
முட்டாள்களுக்கு A போடுவது புத்திசாலிகளுக்கு Cஅல்லது D போடுவது.பல பிள்ளைகளின் வாழ்க்கையை நாசம் செய்து சாதனை செய்தவர்கள் .உலகத்திலேயே முதல் தரமான முட்டாள்களைஉருவாக்கி சாதனை செய்யும் வலயங்கட்டி நாட்டில் எந்த ப…..கலை……. ம் முதல் இடம் கிடைக்குமா?இப்பவும் எப்பவும் கடைசி இடம்தான்.
மற்ற நாடுகளாக இருந்தால் தவறை ஒப்புக்கொண்டு பதவியை துறந்து போய் இருப்பார்கள் ஆனால் இந்நாட்டில் அப்படியா அடுத்தவன் மீது பழியைப போட்டு ‘முழு பூசினிக்காயை சோற்றில் மறைத்து விடுவார்கள் அதுதானே நடந்துக்கொண்டு இருக்கின்றது !
மீன் பிடி அமைச்சனும் கை நக்கியும் இருக்கும் கல்வி துறை மஹா கேவலமான இடத்துக்கு உண்மைதான் somalia நாட்டு கல்வி தரம் நம் மொழ;லமரி UMNO நடத்தும் கல்வி முறையைவிட இன்னும் சிறப்பாக உள்ளதாம் இது british நாட்டு கல்வி மையத்தின் கருத்து சேகரிப்பு விபரமாகும்
வலயங்கட்டிக்கு தேவை இல்லாத விஷயத்தில் ஏன் ஐயா அவர்களை கட்டாய படுத்துகிறீர்??? World standard education is against umno policy!!!
கவலைப்படாதீர்கள்.020-இல் நம்முடைய பல்கலைக்கழகங்கள்தான் 200-இல் முதல் 10 இடைத்தைப் பிடிக்கும். நல்லா தூங்கி நல்ல நல்ல கனவா காணுங்கள்.
உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் மலேசியப் பல்கலைக்கழகம் எதுவும் இல்லை,,எப்படி இருக்கும் ? இவனுங்கதான் முட்டாளுகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்கிரானுங்க்கள ,நல்லா படிக்கும் தமிழ் சீன மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டிகிரானுங்க்கள ,இந்த கன்றாவிலே நம்ப நடிகர் கமலநாதன் முகிடின் கையிலே வாயை வச்சி முத்தம் கொடுக்கிறாரு ,உருப்பிடுமா ?