புதிதாக பொறுப்பேற்றுள்ள சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி, விரைவில் தாக்கல் செய்யவுள்ள மாநில பட்ஜெட்டில் மேம்பாட்டுப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க நினைக்கிறார்.
நடைமுறைச் செலவினத்தைக் குறைத்து மேம்பாட்டுச் செலவினத்தைக் கூட்டுவது அவரின் திட்டமாகும். மேம்பாட்டுச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள இயலாது என்கிறார் அவர்.
மாநில பட்ஜெட்டை தேசிய பட்ஜெட்டுடன் ஒப்பிட்ட அஸ்மின் தேசிய பட்ஜெட்டில் நடைமுறைச் செலவுகளுக்கே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்றார்.
“மொத்த பட்ஜெட்டில் 80 விழுக்காடு நடைமுறைச் செலவுகளுக்கு. மேம்பாட்டுப் பணிக்கு 20 விழுக்காடுதான்”, என்றாரவர்.
இனியாவது பாகாதான் ஆட்சியில் ஒருவரின் சராசரி வருமானம் 6,000.00 ஆக உயருமா ? ஏதும் வழி உண்டா சொல்லுங்க? தோட்டபுற வருமானம் இன்னும் நாள் சம்பளம் தான் ..மாத சம்பளம் சிலாங்கூர் மாநில அரசு முடிவாக முடிவு எடுக்கணும். இயற்கை வளம் நமது, ஆள் பலம் நமது, தண்ணீர் நமது , ஆளுமை மட்டும் அவுங்களுது என்று சரடு விட வேண்டாம்.
பக்காதான் மத்தியில் ஆட்சியைப் பிடித்தல் கேட்க வேண்டியக் கேள்வி இது. மத்திய அரசுக்கு மட்டுமே தனிநபர் வருமானத்தைக் கூட்டக்கூடிய அதிகாரம் உள்ளது. தேசிய பட்ஜெட் தயாரிப்பதிலும், மற்றும் மிக முக்கியமான தேசிய பொருளாதார திட்டங்கள் வகுப்பதிலும் இப்பொழுது பாக்காத்தானுக்கு (மாநில அரசுகளுக்கு) என்ன அதிகாரம் உள்ளது?! உங்கள் tax-ஐ A இடம் கொடுத்துவிட்டு B இடம் அநூகூலங்களை எதிர்பார்க்கிறீர்கள்…!
மேம்பாட்டு வளர்ச்சி திட்டமே தவிர,மக்கள் வளர்ச்சிக்கு திட்டம் இல்லையோ.ஏழ்மை துடைத்தொழிப்பு,கெபாஜிக்கான்,கல்விக்கு ஆதரவு போன்ற திட்டங்கள் மக்களுக்கு ஆருதலாக அமையும்,வாழ்க நாராயண நாமம்.
செலங்கோர் மாநிலத்தை முன் மாதிரியான மாநிலமாக விளங்க செய்ய …வாழ்த்துக்கள்