காலிட் போகும்போது தண்ணீர் உடன்பாட்டையும் எடுத்துச் சென்றுவிட்டாரா?

agreementசெப்டம்பர்  12-இல்  செய்துகொள்ளப்பட்ட  நீர்  சீரமைப்பு  உடன்பாட்டின்  பிரதி  எதுவும்  சிலாங்கூர்  அரசிடம்  இல்லை  என்பதை  அறிந்து  டிஏபி “அதிர்ச்சி” அடைந்துள்ளது.

“மாநிலச்  செயலாளரிடம்கூட  ஒரு  பிரதி  இல்லை  என்பது  ஆச்சரியமாக  உள்ளது. முன்னாள்   மந்திரி  புசார் (அப்துல்  காலிட்  இப்ராகிம்) அலுவலகத்தைக்  காலி   செய்து  மூட்டை  முடிச்சுகளுடன்  புறப்பட்டுச்  சென்றபோது  நீர்  ஒப்பந்தத்தையும்  தவறுதலாக  எடுத்துச்  சென்று  விட்டாரா?

“அப்படிதான்  இருக்க  வேண்டும்.  அல்லது  மத்திய  ஆர்சாங்கம்  சிலாங்கூர்  அரசை  முழுமையாக  அலட்சியப்படுத்தி  ஒப்பந்தத்தை  அதனிடம்  கொடுக்காமல்  இருக்கலாம்”, என  டிஏபி  தலைவர்  டோனி  புவா  இன்று  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலமும்  ஒப்பந்தத்தில்  சம்பந்தப்பட்ட  ஒரு  தரப்பு  என்பதால்  அதனிடம்  அந்த  ஆவணத்தைக்  கொடுக்காமல்  இருப்பது  அம்மாநிலத்தின்  உரிமையை  மீறுவதாகும்.

மத்திய  அரசாங்கம் அந்த  ஒப்பந்தத்தை  மாநில  அரசிடம்  ஒப்படைக்க  வேண்டும் என  புவா  வலியுறுத்தினார். அப்போதுதான்  அதில்  தனது  உரிமைகள்  என்ன,  கடப்பாடுகள்  என்ன  வென்பதை  மாநில  அரசு  தெரிந்துகொள்ள  முடியும்  என்றாரவர்.