அரசாங்கம் பொருள், சேவை வரியிலிருந்து பல பொருள்களுக்கு விலக்களிக்க இயலாது. அப்படிச் செய்தால் அதற்குக் கூடுதல் வருமானம் கிடைக்காமல் போகும்.
இதுதான் உண்மை. ஆனாலும் ஜிஎஸ்டி-விலக்குப் பட்டியலில் மேலும் பல பொருள்களைச் சேர்த்துக் கொண்டால் அது மக்களுக்கு நன்மையாக இருக்கும் என்கிறார் பாஸ் ஆய்வு மைய செயல்முறை இயக்குனர் சுல்கிப்ளி அஹ்மட்.
எது எப்படியோ, அரசாங்கம் ஜிஎஸ்டி-விலக்கு பெற்ற பொருள்களின் பட்டியல் ஒன்றை அரசிதழில் வெளியிடுவது அவசியமாகும். அதை வைத்துதான் குறைந்த வருமானம் பெறுவோர் அவ்வரியிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களா என்பதை அறிய முடியும் என்றாரவர்.
பயனீட்டாளர் செலவில் முக்கிய இடம்பெறும் எரிபொருள் ஜிஎஸ்டி வரிக்கு இலக்காகுமா என்பது குறித்து அரசாங்கம் மெளனமாக இருப்பது பற்றியும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி, உயர் வருமானம் பெறுவோரைக் காட்டிலும் குறைந்த வருமானம் பெறுவோரைத்தான் அதிகம் பாதிக்கும் என்பதால் விமர்சகர்கள் அதை ஒரு பிற்போக்கு வரி எனக் குறை கூறியுள்ளனர்.