எரிபொருளுக்கு ஜிஎஸ்டி உண்டா? டிஏபி கேட்கிறது

petrolஎரிபொருளுக்கு  பொருள், சேவை  வரி  விதிக்கப்பட்டால், மலேசியர்கள்  சந்தை  விலையைவிட  அதிக  விலை  கொடுக்க  நேரிடும்  என்கிறார்  பேராக்  டிஏபி பொருளாதார  மேம்பாட்டுப்  பிரிவு  தலைவர்  சோங்  ஸெமின்.

உலகச்  சந்தையில்  கச்சா  எண்ணெய்  விலை  தொடர்ந்து  வீழ்ச்சி  காணூம்  என  ராய்ட்டர்ஸ்  செய்தி  கூறுவதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

எரிபொருளுக்கு  ஜிஎஸ்டி  விதிக்கப்படும்  என்பதை  நிதி  அமைச்சு  மறுத்துள்ள  போதிலும்  எரிபொருள்  ஜிஎஸ்டி-இலிருந்து  விலக்கு  பெறும்  என்று  மலேசியர்கள் கனவுகாணத்  தயாராக  இல்லை  என  சோங்  கூறினார்.

“பெட்ரோலுக்கு  ஜிஎஸ்டி  விதிக்கப்பட்டால், 6 விழுக்காடு  ஜிஎஸ்டி  சேர்க்கப்படும்  என்பதால்,  பெட்ரோலின்  விலை  ரிம2.44 ஆக உயரும்”.

எனவே, பெட்ரோலுக்கு  ஜிஎஸ்டி  உண்டா,  இல்லையா  என்பதுதான்  கேள்வி.   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் உடனே  இதைத்  தெளிவுபடுத்த  வேண்டும், பட்ஜெட்வரை  காத்திருக்கக்  கூடாது  என  சோங்  வலியுறுத்தினார்.