எரிபொருள் விலை உயர்ந்தாலும் சந்தை விலையைவிட அது குறைவுதான்

maslanஎரிபொருள் விலை  அண்மையில் உயர்த்தப்பட்டிருந்தாலும்  உலகச்  சந்தை  விலைப்பருவத்துடன்  ஒப்பிட்டால்  ரோன்95,  டீசல் ஆகியவற்றின் விலை  குறைவுதான்.

“ரோன் 95-க்கு  பிஎன்  அரசாங்கம்  இன்னமும்  உதவித் தொகை  வழங்கிக்  கொண்டுதான்   இருக்கிறது. ஒவ்வொரு  லிட்டருக்கும்  ரிம0.28  வழங்கப்படுகிறது.  டீசலுக்கு  ரிம0.32”, என நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  கூறினார்.

உலகச்  சந்தையில்  எண்ணெய்  விலை  குறைந்துவரும்போது  மலேசியாவில்   எரிபொருள் விலை  உயர்ந்திருப்பதைப்  பலரும்  குறைசொல்லி  வருவதற்கு  எதிர்வினையாக  அஸ்ட்ரோ அவானியிடம்  அவர்  இவ்வாறு  கூறினார்.