மசீச அடுத்த வாரம் நடைபெறும் அதன் ஆண்டுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) செய்திகள் சேகரிக்க மலேசியாகினியை “அழைப்பதில்லை” என முடிவு செய்துள்ளது.
இன்று அதன் மத்திய செயல்குழுக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதைத் தலைமைச் செயலாளர் ஒங் கா சுவான் உறுதிப்படுத்தினார்.
“சில செய்தியாளர் கூட்டங்களில் தலைவர்கள் கூறியதை நீங்கள் திரித்து வெளியிட்டிருக்கிறீர்கள் என்பதால் (ஏஜிஎம்முக்கு) உங்களை அழைக்க வேண்டாம் எனக் கூறி இருக்கிறார்கள்”, என ஒங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஆனால், மத்திய செயல்குழு எந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறது என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்தார்.
அம்னோவின் அடிவருடிகள் எப்படி மலேசியாகினியை அழைப்பார்கள்?