போலீசின் தோற்றத்தைப் பாதுகாக்க குற்றவியல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது

lflபோலீஸ் அதைக்  குறைகூறுவோருக்கு  எதிராக  குற்றவியல்  சட்டத்தைத் “தவறாகப்  பயன்படுத்துவதாக”  சுதந்திரத்துக்கான  வழக்குரைஞர்கள்  அமைப்பு(எல்எப்எல்)  சாடியுள்ளது.

அண்மையில்  அச்சட்டத்தைப்  பயன்படுத்தி  பல  கைது  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டிருப்பது  குறித்து  கருத்துரைத்த  அவ்வமைப்பின்  செயல்முறை  இயக்குனர்  எரிக்  பால்சன்,  அச்சட்டம்  தவறாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது  என்றும்  அச்சட்டத்தின்   நோக்கம்  குறைகூறலிலிருந்து  போலீசைப்  பாதுகாப்பதல்ல  என்றும்  கூறினார்.

“பொதுமக்களிடம்  போலீஸ்  மீதான  மதிப்பு  வெகுவாகக்  குறைந்துள்ளது. இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப்  போலீஸ் (காலிட்  அபு  பக்கார்)  வேண்டுமானால் இதை மறுக்கலாம்.  ஆனால்,  இல்லை  என  வாதாடுவது  சிரமம்”, என  பால்சன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அதிகார  அத்துமீறல்களாலும்  கைது நடவடிக்கைகளாலும்  போலீசின்  மதிப்பைப்  பாதுகாக்க  முடியாது  என்றாரவர்.

அச்சுருத்தல்  மூலமாக மக்களிடம்  மதிப்பைப்  பெற  முடியாது  என்பதைப்  போலீஸ்  தலைவருக்கு  அவர்  நினைவுபடுத்தினார். மக்களின்  நம்பிக்கைக்குப்  பாத்திரமாவதன்வழிதான்  அதைப்  பெற  முடியும்.

“அது  போலீசின்  நன்னடத்தையையும் நம்பகத்தன்மையையும்  பொறுத்துள்ளது”, என்றவர்  குறிப்பிட்டார்.