குப்பைத் தொட்டியோ சாக்கடையோ அரைக்கை வெள்ளைச் சட்டை அழுக்காகி விடுமே என்று யோசிப்பதில்லை உடனே இறங்கி வேலை செய்யத் தொடங்கி விடுகிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி.
நேற்று ஒரு குப்பைத் தொட்டிக்குள்ளேயே அவர் இறங்கியதைக் காண்பிக்கும் படங்களைச் சமூக வலைத்தளங்களில் நிரப்பி அசத்தி விட்டார்கள் அவரின் ஆதரவாளர்கள். அது அரசியலில் மின்னல் வேகத்தில் புகழ்பெற்று இந்தோனேசிய அதிபராகியுள்ள ஜோகோ விடோடோ குப்பை மேடு ஒன்றில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தை நினைவுபடுத்தியது.
இன்னும் சில படங்கள் அவர் சட்டவிரோத குடியேறிகளின் குடியிருப்புக்குள் வலம் வருவதைக் காண்பித்தன.
மற்றொரு படத்தில் அவர் சாக்கடைக்குள் இறங்குகிறார். ஒரு கூட்டம் அவரைச் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது.
அஸ்மின் செயல்படும் விதம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
வாங்கையா வாத்தியர் ஐயா உங்கள் வரவு நல் வரவாகட்டும்
நல்லது ,ஆனால் பங்களா காரனுங்க்களை அடக்கி ஒடுக்கி கைலாசம் பண்ணினால் நல்லது
இந்த மாதிரியான தலைவரைத்தானே நாங்கள் எதிர்பார்த்தோம்.எங்கள் பகுதியில் சாலைகள் பழுதடைந்து மக்கள் சிரமப்பட்டதை எத்தனையோ முறை முன்னால் மந்திரி புசாரிடம் புகார் கொடுத்தோம்.. கண்டுகொள்ள அவருக்கு நேரம் இல்லை. ஆனால் இன்று எல்லாம் தானாவே நடக்கின்றன. சாலை செப்பனிடப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது – நாலே நாளில்..! இவரின் இந்த பாணியிலான மக்கள் பணிபுரியும் விதம் வரவேற்கத்தக்கது.
இதே வேகம் இதே பாணி தொடருமா …………
அப்படி தொடர்ந்தாள் நன்று………
இதே வேகத்தில் போனால் பக்காத்தானை அடுத்த தேர்தலில் அசைக்க முடியாது. அதே போல கணபதி ராவ் அண்ணாச்சியும் தூக்கத்தைக் கலைந்தால் எங்களுக்கும் பெருமையாக இருக்கும்!