கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்க மலேசியாகினியை அழைப்பதில்லை என்ற மசீச மத்திய குழுவின் முடிவு மசீச முன்னாள் தலைவர்கள் இருவருக்குப் பெரும் வியப்பைத் தந்துள்ளது.
முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், மலேசியாகினி பலமுறை தமக்கு எதிர்ப்பாகவே செய்திகளை வெளியிட்டிருந்தாலும் கட்சி நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க அந்த ஊடகத்துக்குத் தடை விதித்தது இல்லை என்றார்.
“(மலேசியாகினியை) அழைக்காதது தவறுதான்.
“இது சிறுபிள்ளைத்தனமானது. ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகளைச் சேகரிக்கவும் அறிவிக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும்”, என்றார்.
இன்னொரு முன்னாள் தலைவரான ஒங் தி கியாட்டைத் தொடர்புகொண்டபோது “இதற்குமுன் அப்படி நடந்ததில்லை” என்றார்.
“மசீச-வில் நான் இருந்தபோது எந்த ஊடகத்தையும் செய்தி சேகரிக்கக் கூடாது எனத் தடுத்ததில்லை”, என்றவர் குறிப்பிட்டார்.
தவறு செய்பவன் தான் பயப்பட வேண்டும் அப்படி என்றால் மா சி சா தவறு செஇதுகொண்டிருகிரது இல்லை என்றால் ஏன் மலேசிய கினியை அழைக்கவில்லை.
இலையென்றால் மீண்டும் ஒரு ஆபாச படம் வெளியாரிரும் என்ற பயம் ,,பார்கிறதுக்கு செத்த பாம்பு மாதிரிலே இருந்தது