டிஏபியின் மத்திய நிர்வாகக் குழு(சிஇசி) அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என அக்கட்சி கூறிக்கொண்டாலும் இன்னும் அதற்கு முறைப்படி அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை எனச் சங்கப் பதிவகம் கூறுகிறது
“அவர்கள் எப்படி அவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எங்களுக்கு நீதிமன்றத்திலிருந்து அதன் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை”, என ஆர்ஓஎஸ் துணை இயக்குனர் முகம்மட் நோர்ஸாம் முஸ்தபா தெரிவித்ததாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
“ஆர்ஓஎஸ் அவ்விவகாரத்தை இன்னமும் விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறது. விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்”, என்றாரவர்.