உதயகுமார்: இந்தியர்கள் பக்கத்தான் பக்கம் திரும்ப வேண்டும்

 

uk turn to Pakatanதேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டு 485 நாட்களை சிறையில் கழித்து அக்டோபர் 3 இல் விடுதலையான ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் ஓரங்கட்டப்பட்டு, சோர்வடைந்து நிற்கும் இந்திய சமூகத்திற்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கையில் மீண்டும் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அவர் இந்தியர்களை பக்கத்தான் பக்கம் திரும்புமாறு கேட்டுக் கொண்டார்.

கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் தனித்து நின்று கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற உதயகுமார் ஹிண்ட்ராப் பின்பற்றிய வியூகம் தோல்வியில் முடிந்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

“நாங்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். விரும்புகிறோமா இல்லையோ, பெரும்பாலான இந்தியர்கள்

பக்கத்தானுக்கு வாக்களித்தனர். அது ஒரு ஜனநாயக முடிவு. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

சிறையில் இருக்கையில், இந்தியர்களின் பரிதாபநிலை பற்றியும் அவர்களை எவ்வாறு முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்வது என்பது பற்றியும் சிந்தித்தேன், சிந்தித்தேன், மனதில் ஓர் இருட்டடிப்பு ஏற்படும் வரையில். “பக்கத்தானை தவிர வேறு தீர்வே இல்லை”, என்றாரவர்.

“வேறு வழி இல்லை. பிஎன் தெரிந்த விசயம்”, என்று கூறிய உதயகுமார், அவரது சகோதரர் பி. வேதமூர்த்தி இந்தியர்களை பிஎன் பக்கம் சாய்க்க மேற்கொண்ட முயற்சிகளை தம்முடன் இருந்த கைதிகள் எதிர்த்தாக அவர் மேலும் கூறினார்.

பெரும்பாலான இந்தியர்கள் பக்கத்தானுக்கு வாக்களித்தனர். ஆகவே, அவர்கள் அதன் மூன்று முக்கிய தலைவர்களான அன்வார் இப்ராகிம், அப்துல் ஹாடி அவாங் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோரை நாடுவது பொருத்தமாகும் என்றார்.

உதயா வாஷிங்டன் செல்கிறார்

தமது சிறைவாசத்தின் போது தாம் அமெரிக்க சிவில் உரிமை போராட்டங்கள் பற்றி நிறைய வாசித்ததாக கூறிய அவர், பக்கத்தானின் இந்தியர்-அல்லாத தலைவர்கள்தான் ஏழை இந்தியர்களின் நலன்களுக்காக போராட வேண்டும் என்றார்.

தம்மைப் பொருத்தவரையில், தற்போதைக்கு பொது விவகாரங்களிலிருந்து சற்று விலகியிருக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

“நான் வாஷிங்டனில் ஆய்வு செய்தல் மற்றும் விரிவுரை ஆற்றல் ஆகியவற்றுக்காக சில ஆண்டுகளை அங்கு கழிக்கவிருக்கிறேன்”, என்ற கூறிய உதயா தமது பயணம் குறித்து எதுவும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லை என்றார்.

இத்துடன் ஹிண்ட்ராப் இயக்கம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்விக்கு, அது மறைந்து விடாது என்று வலியுறுத்திக் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப்பின் திட்டம் தோல்வி கண்டது. இம்முறை போலியான நம்பிக்கை எதனையும் ஊட்ட தாம் விரும்பவில்லை என்றாரவர்.

“நான் இப்போது விடுதலையாகை விட்டதால், நான் மந்திர தந்திரங்களைச் செய்வேன் அல்லது அவர்களுக்கு ஏதாவது நம்பிக்கை அளிப்பேன் என்று சிலர் நினைக்கிறார்கள். நான் அதனைச் செய்ய முடியாது.

தற்போதைக்கு, நிலவரத்தை கவனித்து அதிலிருந்து பாடம் படிப்பேன் என்றாரவர்.