போம்கா: எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு கூடும்

fomcaரோன்95  பெட்ரோல்,  டீசல்  ஆகியவற்றின்  விலை  20 சென்  உயர்ந்திருப்பதை  அடிப்படையாக  வைத்து  வணிகர்கள்  பொருள்  விலைகளைக் கூட்டுவது  முறையாகாது  என்று  பயனீட்டாளர்  சங்கங்கள்  கருதுகின்றன.

ரோன்95 பெட்ரோல்,  டீசல்  ஆகியவற்றின் விலை  உயர்வைச்  சாதகமாகக்  கொண்டு  கொள்ளை  இலாபம்  தேட முனைவது  பொறுப்பற்ற  தனமாகும்  என்று  அவை  கூறின.
எரிபொருள்   விலை உயர்வால்  போக்குவரத்துச்  செலவு  கூடுவதைத்  தவிர்க்க  இயலாது. ஆனால்,  பொருள்களில்  அதன்  தாக்கம்  குறைவாகத்தான்  இருக்கும்  என  மலேசியப்  பயனீட்டாளர்  சங்கங்களின்  கூட்டமைப்பான  போம்காவின்  தலைமைச்  செயலாளர்  பால்  செல்வராஜ்  கூறினார்.