குற்றச்செயல் எதிர்ப்பு என்ஜிஒ மைவாச் தலைவர் ஆர். ஸ்ரீசஞ்சீவன் சமீபத்தில் இரண்டு பிஎம்டபுள்யு கார் எண் தட்டுகளுக்கு – BMW8 மற்றும் BMW11 – ரிம340,000 கொடுத்து ஏலத்தில் வாங்கியதற்காக கடுமையாக குறை கூறப்பட்டார்.
போலீசாரின் நடத்தைகளை கடுமையாக குறைகூறி வரும் சஞ்சீவன் தாம் அந்த இரு தட்டுகளை வாங்கியதாக டிவிட்டர் செய்துள்ளார்.
தாம் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து செலவு செய்வதை யாரும் குறைகூறக் கூடாது, மாறாக “பொது நிதிகள் வீணாக்கப்படுவது” பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் என்று திருப்பி அடித்துள்ளார்.
“கடந்த 48 மணி நேரத்தில் நான் ஏராளமான குறைகூறல்களை கேட்கிறேன். ஆனால் நான் அரசாங்கத்திற்கு செய்துள்ள பங்களிப்பை அனைவரும் மறந்து விட்டார்கள். அந்த பணம் மக்களுக்கே போய் சேருகிறது”, என்று அவர் நேற்று டிவிட்டர் செய்தார்.
BMW1 மற்றும் BMW2 ஆகிய இரு தட்டுகளை பெயர் கூறப்படாத இரு அரசு பணியாளர்கள், பணம் ஏதும் கட்டாமல், ஏலம் கூட கேட்காமல் எப்படி பெற்றார்கள் என்று அவர் வினவினார்.
“நான் ஒரு நல்ல குடிமகன் ஏனென்றால் எனது ஹலால் வருமானத்தை அரசாங்கத்திற்கு கொடுக்கிறேன். அதை இலசவசமாக எடுத்துக்கொள்பவர்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அது (அரசாங்கத்திற்கு) இழப்பு, இல்லையா? என்று அவர் மீண்டும் டிவிட்டர் செய்தார்.
படத்தில் காணப்படும் பட்டியலில் இன்னும் மூன்று பெயர் கூறப்படாத அரசாங்க பணியாளர்கள் ஏலத் தொகை எதுவும் குறிப்பிடாமல் BMW7, BMW9, மற்றும் BMW10 ஆகியவற்றை ஏலத்தில் வென்றுள்ளனர்.
அந்த பட்டியலில் BMW6 க்கு தேசிய பூப்பந்தாட்டக்காரர் லீ சோங் வெய் ரிம97,000 ஏல விலை குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகையில், இதர முக்கியமான ஏல விலை குறிப்பிட்டு கேட்டவர்கள் அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.
BMW1, BMW2, BMW7, BMW9 மற்றும் BMW10 ஆகிய கார் எண் பட்டைகளை பெற்றவர்கள் அரசு பணியாளர்கள் யார்?
தம்பி சஞ்சீவன் ! நீங்கள் செலுத்திய 340.000 பணம் அரசாங்கத்துக்கே ( பொது மக்களுக்கு ) சேர்வதை புரியாமல் உளறுகிறார்கள் ! அரசாங்க பணத்தை ஆடையை போட்டால் வாய் பொத்தி இருப்பார்கள் !
இன்கம்டேக்ஸ் கணக்கு முறையாக இருந்தால் நல்லது. இல்லன ஆப்புதான்.
என்னை பொறுத்த வறை,ஓரு இந்தியன் வாழ்வில் முன்னுக்கு வந்ததில் ஆணந்தமே,வாழ்க நாராயண நாமம்.
வாழ்க சஞ்சிவன் சொந்தமாக உழைட பண்டை அவர் செலவு செய்கிறார் அதுல என்ன தப்பு அண்ட படம் அரசன்கடுகுடனே போகிறது இருந்தாலும் அண்ணே வறுமையில் உள்ள மகளுக்கு கொடுட இன்னும் சிற்பக இருக்கும்
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் சொந்தப் பணத்தில் கார் மட்டும் அல்ல எதனையுமே வாங்கக் கூடாது என்பது அம்னோவால் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு மரபு! அதை எப்படி மீறலாம் என்பது தான் அவர்களின் கேள்வி!
சஞ்சீவன் நல்ல மனிதர் MIC போன்ற சோணகிரி திருடனுங்க அல்ல
திரு சஞ்சீவன் அவர்களே, உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாட்டு மக்களுக்கு இந்த 340,000 ரிங்கிட் மலேசியா போய் சேர்ந்தால் நல்லது தான். ஆனால் கொள்ளையடிப்பவனிடம் சேர்ந்தால் ???.
BMW1 மற்றும் BMW2 ஆகிய இரு தட்டுகளை பெயர் கூறப்படாத இரு அரசு பணியாளர்கள், பணம் ஏதும் கட்டாமல், ஏலம் கூட கேட்காமல் எப்படி பெற்றார்கள்? இதை கேட்க எவருக்கும் வக்கில்லையா?