ஏழு பணியாளர்களுடன் அரச மலேசிய கடல்படையின் பீரங்கிப் படகு ஒன்று நேற்றிரவு சாபா கடல்கரைக்கு அப்பால் காணாமல்போனதைக் கடல்படைத் தலைவர் அப்துல் அசீஸ் ஜாபார் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதைத் தேடும் பணியில் நேற்றிரவிலிருந்து ஐந்து கப்பல்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவற்றுடன் இன்று காலை அரச மலேசிய ஆகாயப்படை விமானங்கள் இரண்டும் சேர்ந்து கொண்டதாகவும் அப்துல் அசீஸ் கூறினார்.
வானிலை மோசமாக இருந்ததால் விமானங்களை முன்பே அனுப்ப முடியவில்லை என்றாரவர்.
பீரங்கி படகு தீவீரவாதிகளிடம் சிக்காமல் இருந்தால் நலம் ! அனைவரும் நலமுடன் திரும்ப பிராத்திப்போம் !
முதலில் MH 370 , இப்போது பீரங்கிப் படகு . அடுத்து ???
அந்த பீரங்கி படகில் உள்ள உயிர்கள் மிக மிக முக்கியம்.
அந்த கப்பலில் ரேடியோ , gps எல்லாம் இருக்குமே ?